நான் என்ற அகந்தையும் வேண்டாம்
மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம்
எல்லோரையும் வெறுக்க வேண்டாம்
எல்லோரையும் பேச வேண்டாம்
கோபம் வேண்டாம்
சண்டை வேண்டாம்
பிடிவாதம் வேண்டாம்
நல்ல மனமும்
சிறந்த குணமும்
அனுசரித்து நடக்கும்
பாங்கும் வேண்டும் எல்லோரிடத்திலும்
வெள்ளை , கறுப்பு என்ற
பாகுபாடு வேண்டாம்
எதுவானாலும் சரி
கலரை பார்த்து ஏமாற வேண்டாம்
அது ஆபத்து என்பதை மறக்க வேண்டாம்
பணம் பெரிதில்லை
சொத்து பெரிதில்லை
வீடு , வாசல் பெரிதில்லை
இன்று கஷ்டப்படுபவன்
நாளை செல்வந்தன் ஆகிறான்
அதனையும் மறக்க வேண்டாம்
சாதி பெரிதில்லை
இனம் பெரிதில்லை
மதம் பெரிதில்லை
ஆனால், கண்ணியத்துடன் இருக்க வேண்டும்
குடும்ப பாங்கான ஒருவனாகவோ
ஒருத்தியாகவோ இருங்கள்
உங்களை தேடி வாய்ப்புகள் வரும்
ஒரு வரனோ , ஒரு மகளோ
உங்களுக்கு கிடைப்பார்கள்
அதனை மறக்க வேண்டாம்
எல்லா அம்மாமாரும்
நீங்களும் ஒரு குழந்தையாக
மகளாக , மனைவியாக
தாயாக இருந்து தான்
மாமி என்ற அந்தஸ்தை
அடைந்தீர்கள் என்பது உங்கள்
எல்லோருக்கும் நினைவு இருக்கட்டும்
குடும்பத்தில் எல்லாம்
மாமி மருமகள் சண்டை
தான் எல்லா இடங்களிலும்
நடக்கின்றது நாம் அறிந்ததே
அது ஏன் அப்படி நடப்பான் ?
மாமி வீட்டுக்கு வரும் மருமகளை
மகள் போல் பார்த்தால் ஏன் இந்த நிலை
பிரச்சனைகளை கண்டு ஒதுங்காது
அந்த பிரச்சனைகளை எவ்வாறு
சமாளிப்பது என்பதே புத்திசாலித்தனம்
பெண்மணிகளே ............................
5 comments:
arumai..vaaltthukkal
அனுசரித்து நடக்கும்
பாங்கும் வேண்டும் ...
இது அனைவருக்கும் பொருந்தும்.
நல்ல கவிதை
நல்ல கவிதை pavi
நன்றி முருகானந்தன் டாக்டர் அவர்களே
நன்றி சரவணன் . ஆர்
Post a Comment