மனிதனாக பிறந்த எல்லோரும் தவறு செய்வது வழமை . நாம் செய்தது தவறு என்று உணர்ந்து திருந்தி நடப்பவன் சிறந்த மனிதன் . ஒரு தவறு இளைத்து விட்டோமே என வருந்தி நாம் அதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வது வழமை . சிலர் அதைக் கூட கேட்பதில்லை . நாம் தவறே செய்ய வில்லை என்று வாதிடுவோர்களும் உள்ளனர் .
சரி மன்னிப்பு கேட்கும் போது அந்த மன்னிப்பை ஏற்று கொள்பவன் ஒழுக்கசீலன் . மன்னிப்பது மனித இயல்பு . மறப்போம் மன்னிப்போம் என்பார்கள் . அன்பு என்பது என்ன ?அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். அதுபோலதான் நாம் தவறு செய்யும் போதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இந்த உலக நியதி .
தவறு செய்பவனை தண்டிப்பது கூடாது . அவன் திருந்த வழி சொல்ல வேண்டும் . குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள். அதனை பெரிது படுத்தாதீர்கள் . மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள். அப்போது அந்தக் குழந்தை தான் ஏதாவது தவறு செய்யும் போது அதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அதற்க்கு விளங்கும் . எதிர்காலத்தில் இந்த நல்ல பழக்கத்தையே கைப்பிடிக்கும் .
இறைவன் எத்தனையோ பேர் செய்யும் செயல்களுக்காக மன்னிக்கின்றார் . மன்னித்து கொண்டு இருக்கிறார் . மன்னிப்பது மனித இயல்பு .
7 comments:
aஅழகானதொரு வாழ்க்கைப்பாடம்.வாழ்த்துக்கள் பவி
அழகானதொரு வாழ்க்கைப்பாடம்.வாழ்த்துக்கள் பவி
அருமையான கருத்தை பகிர்ந்திருக்கிறீர்கள் பவி.
வாழ்த்துக்கள்.
மன்னிப்பு கேட்டுவிட்டாலே எதிரிக்கு நாம் மீதான கோபம் மறைந்து விடும். மன்னிப்பு என்பது மிக பெரிய ஆயுதம்.
நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி குமார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி பாலா
Post a Comment