Tuesday, September 20, 2011

சிந்திக்க சில நிமிடம் .........

http://www.webanddesigners.com/wp-content/uploads/2010/04/manage-work/efficiently.jpg
* அழுவதற்க்கு உனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என்றாலும் , உங்கக்கு சிரிப்பதற்க்கு இலட்சம் காரணங்கள் இருக்கின்றன . 

* முடியாது என்பது மூடத்தனம் . முடியும் என்பதே மூலதனம் . 

* எந்த விசயத்திலும் அக்கறை நம்மை உயர்த்தும். கவலை நம்மை தாழ்த்தும் .
http://thesavageworld.files.wordpress.com/2011/03/hard-work.jpg
*வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் . வாழ்க்கை ஒரு புதிர் என்பர் . வாழ்க்கை ஒரு கணக்குத்தான் என்பர். இதில் திறமையை கூட்டி , தவறைக் கழித்து , உழைப்பை பெருக்கி , காலத்தை வகுத்து செயற்பட்டால் வாழ்வில் வசந்தம் தான் .

* சம்பாதித்தால் மட்டும் ஒருவன் பணக்காரனாக ஆகிவிடுவதில்லை . அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அவன் சேமித்து வைப்பதே மிகவும் முக்கியம் .
http://www.real-estate-marketing-link.info/image-files/work-hard.jpg
* உழைத்து , உழைத்து எல்லாம் சேமித்து வைத்தால் அது ஒன்றுக்கும் உதவாது . கொஞ்ச பணத்தை ஏழை , கஷ்டப்பட்ட சிறார்கள் , ஏழை பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றுக்கு கொடுத்து உதவினால் இன்னும் சீரும் , சிறப்புடனும் வாழலாம் .

* உடல் இருந்தும் உழைக்காதவர்கள் , கையிருந்தும் ஈயாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் .

* யோசித்து , சிந்தித்து செயலில் இறங்கினால் வெற்றி நமதே .

* இடது கை , வலது கை என இரு கைகளுடன் எமக்கு புன்னகையும் , நம்பிக்கையும் இருந்தால் தன்னம்பிக்கை பிறக்கும் . 


4 comments:

குறையொன்றுமில்லை. said...

* முடியாது என்பது மூடத்தனம் . முடியும் என்பதே மூலதனம் .



ஆமா, உன்மையிலும் உண்மை.

பாலா said...

உத்வேகம் அளிக்கும் சிந்தனைகள்.

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே

Pavi said...

நன்றி பாலா