Wednesday, September 21, 2011

வெளிநாடு வெளிநாடு என்று படும்பாடு ..............

http://pixdaus.com/pics/1221489472xNPKIgk.jpg
எல்லோரும் வெளிநாடு போக ஆசைப்படுகிறார்கள் . எல்லோருக்கும் அந்த ஆசை எளிதில் கிடைத்து விடுவதில்லை . சிலருக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கிறது . குடும்பத்தில் வறுமை, கஷ்டம் , பிரச்சனை , குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வெளிநாடு செல்கின்றார்கள் .

நகைகளை விற்று , வீடுகளை விற்று , பணம் வட்டிக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள் . வெளிநாடு சென்றவுடன் உடனே வேலை கிடைத்து விடுமா ? அங்கு, தேடி இங்கு தேடி வேலைக்கு அலைகிறார்கள் . உடனே விசா கிடைக்குமா . பத்து வருடங்கள் ஆகியும் விசா கிடைக்காமல் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் . அவர்கள் ஓடி , ஒழித்து ஒருநேர வேலை என்றாலும் செய்து தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புகிறார்கள் . 

 வெளிநாடுகளில் வேலை என்ன ஆசிரியர், வைத்தியர் , தாதி என்று உடனே வேலை கிடைத்து விடுமா . ஒரு ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் , மரக்கறி வெட்டுபவர் , பாத்திரங்கள் கழுவுபவர், பலன்கள் புடுங்குதல் போன்ற வேலைகள் தான் கிடைக்கும் . மொழி படித்தால் கொஞ்சம் நல்ல வேலைகள் பார்க்கலாம் . உங்கள் அறிவுக்கும் , நீங்கள் வாங்கிய பட்டங்களுக்கும் , நீங்கள் செய்யும் வேலை எதிர்மாறானதாக இருக்கும் . 
http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/03/4f/ab/resturant-on-top-floor.jpg
வெளிநாட்டு பணத்தை இங்கே அனுப்பினால் அதுதான் பெறுமதி கூட . ஆனால், அங்கெ அதே பெறுமதி தான் . தாம் கஷ்டப்பட்டு உழைத்து ஒருநேரம் சாப்பிட்டு தமது கடனை கட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் தமது சம்பளத்தை தமது உறவுகளுக்கு அனுப்புகிறார்கள் . சரியாக கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களில் தமது கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விடுகிறார்கள் . 

பின்பு தமது குடும்பத்தில் இருக்கும் அக்கா , தங்கைமாருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் , சீதனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் பொறுப்புகள் இருக்கின்றன . தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி கடும் குளிரும் பாராது கஷ்டப்பட்டு உழைத்து முறிந்து அந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்க்கிறான் .
http://img.ehowcdn.com/article-page-main/ehow/images/a06/2a/1m/better-waiter-800x800.jpg
உடனே தாயார் போன் பண்ணி தம்பி எனக்கு நெஞ்சு வலி , தலை வலி என்று தொலைபேசியில் அழுவார் . பின்பு அவருக்கு பணத்தை அனுப்புவான் . அவர்கள் இங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் . மகன் பணம் அனுப்புகிறான் . எனக்கு என்ன ? என்று ஆடம்பரமாக இருப்பார்கள் . மரக்கறி சந்தைக்கு போய் பொருட்கள் வாங்கி விட்டு பணத்தை வெளிநாட்டு தாள்களை கொடுத்து விட்டு வருபவர்களும் உள்ளனர் . 

இப்படி எல்லாம் தனது பெற்றோர்களையும் , உறவுகளையும் பார்த்து சரியாக கஷ்டப்பட்டு இருக்கும் நிலையில் அவனது வயதை பார்த்தல் முப்பத்தைந்து ஆகி இருக்கும் . பின்பு அவன் தனது எதிர்காலத்தை பார்க்க வேண்டும் . பின்பு பெற்றோர் பார்க்கும் பெண்ணை அவன் தனது ஊருக்கு வந்து கல்யாணம் செய்து பின்பு அந்தப் பெண்ணை ஒரு வருடத்துக்குள் தனது நாட்டுக்கு கூப்பிடுகிறான் . பிபு தனது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்கின்றான் . 
http://www.best-free-wallpaper.com/cute/wp-content/uploads/2010/10/Opel-Period-Photos-of-Winter.jpg
கடும் குளிர் , கஷ்டமான வேலை என்று அவன் படும் கஷ்டங்கள் ஏராளம் . எல்லோரும் வெளிநாடு என்றவுடன் மிகவும் சுலபமாக நினைத்து விடுகிறார்கள் . இங்குள்ளவர்கள் எனது மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு சுதியாக வாழ்கின்றார்கள் . தம்பி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றித் திரிகிறான் , தங்கை பைக்கில் தோழிகளுடன் ஊர் சுற்றி திரிகிறாள் . என்ன என்று கேட்டால் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான் . எங்களுக்கு என்ன கவலை ? என்கின்றனர் . அவன் படும்பாடு இவர்களுக்கு தெரிவதில்லை. 

இப்படித்தான் எல்லா வீடுகளிலும் நடக்கின்றது . ஒரு வீட்டில் அப்பாவோ , அண்ணனோ வெளிநாடுகளில்  இருந்து பணம் அனுப்புகிறார்கள் . எல்லோரும் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் . அவர்களும் மனிதர்கள் தானே . வெளிநாடு வெளிநாடு என்று அதிக பணத்தையும் , சொத்துகளையும் இழந்தவர்களின் கவனத்துக்கு .............
10 comments:

இராஜராஜேஸ்வரி said...

கனமான் துளிகள்.!

பாலா said...

பணம் என்ற ஒன்றே குறிக்கோளாக கொண்டால் வாழ்வில் நிம்மதி இருக்காது

R.Elan. said...

யதார்த்தங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்.நன்றி சகோ.

சே.குமார் said...

நிதர்சனப் பகிர்வு பவி.
இதை மையமாக வைத்து நான் மனசில் மனச்சுமை (தினத்தந்தி குடும்பமலரில் 'மூத்தவன்' என்ற பெயரில் வெளிவந்தது) என்ற கதை ஒன்று எழுதியிருந்தேன்.
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி ஈஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான் . நன்றி பாலா

Pavi said...

நன்றி ஈழன்

Pavi said...

இப்படியான பதிவுகள் நாம் எல்லோரும் பதிவுகளில் இட வேண்டும் . நன்றி குமார்

வியபதி said...

வெளிநாட்டில் வாழ்பவர்கள் பணவசதி உள்ளவர்களாக இருப்பதுபோல தோன்றலாம்.ஆனால் அவர்களுக் குள்ள பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் இங்குள்ள சொந்தக்காரர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

Pavi said...

ஆமாம். சிலர் அதனை புரிந்துகொள்வதில்லை . நன்றி வியபதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்