பல தோல்விப் படங்கள் கொடுத்து ஒரு பட வெற்றியால் தலை நிமிர்வோரும் உண்டு . பல் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டு இருக்கும் நடிகர்களும் உண்டு . இரண்டு படங்களுக்கு ஒரு படம் வெற்றி படம் கொடுப்போரும் உண்டு .
படங்கள் பல கோடிகளை கொட்டி தயாரிக்கிறார்கள் . அந்த தயாரிப்பளருக்கு படம் வெற்றி பெற்று விட்டது என்றால் அவரது பணப்பை நிரம்பும் . அவரும் சந்தோசப்படுவார் . ஆனால், படம் தோல்வி அடைந்து போட்ட முதலுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டால் அந்த தயாரிப்பாளர் தனது சொந்த நிலம் , வீடு என்பவற்றை விற்க வேண்டிய நிலைமைகளும் உண்டு .
தயாரிப்பாளர்கள் சிலர் இரண்டு , மூன்று படங்கள் அவர்களின் தயாரிப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு படம் இமாலய வெற்றி அடைந்து விட்டது என்றால் தப்பித்து விடுவார் . தயாரிப்பளருக்கும் நல்ல காலம் இருக்க வேண்டும் .
சினிமாவில் எத்தனையோ பேர் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருக்கின்றனர். எத்தனையோ பேர் சினிமாவை நம்பித்தான் தமது வாழ்க்கையை நம்பி இருக்கிறார்கள் . நாமெல்லாம் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு படத்தை பார்த்து விட்டு இந்த படம் உதவாது , இது நல்ல படம் என்று சொல்லி விட்டு வந்து விடுவோம் . ஆனால் , அவர்கள் எல்லாம் எவ்வளவு மாதங்கள் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்து முடிக்கிறார்கள் . அதன் பின்னணியில் எத்தனை தொழில் நுட்பவியலாளர்கள் , கலைஞர்கள் போன்றோரின் கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா ?
நடிகர்கள் கோடிகள் கேட்கிறார்கள் . தமது சம்பளத்தை உயர்த்துகிறார்கள் . சிலர் நல, உதவிகள் , சிறுவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறார்கள் , வறியவர்களுக்கு உதவுகிறார்கள் . சில நடிகர்கள் சத்தமில்லாமல் உதவிகளை செய்து மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . சில நடிகர்கள் எல்லோருக்கும் பரப்பி நான் இந்த உதவி செய்தேன் , அந்த உதவி செய்தேன் என்கின்றனர் . எதுவோ ஏழை , எளியவர்களுக்கு உதவிகள் சரிவர கிடைத்தால் போதும் .
நடிகர்களை வைத்து இலாபம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் எல்லாம் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள் . ஏனெனில் , அவரின் வலியு அப்படி இருக்கிறது . படம் நன்றாக ஓடுகிறது . வெற்றி அடைகிறது . இந்த நடிகரை வைத்து நாம் படம் பண்ணினோம் என்றால் நாம் போட்ட முதலுக்கு பத்து மடங்கு இலாபம் உழைக்கலாம் என்றால் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத்தானே வேண்டும் .
நடிகர்களின் மார்க்கட் நிலவரம் உயர்கிறது . நல்ல படங்கள் கொடுக்கிறார்கள் . நல்ல ஒப்பினிங் இருக்கிறது . ரசிகர்களின் கூட்டம் அதிகம் படம் பார்க்க வருகிறார்கள் . படத்தில் போட்ட முதலுக்கு மேல் இலாபம் கிடைக்கிறது . விநியோகஸ்தர்கள் சந்தோசம் அடைகிறார்கள் .
நடிகைகளுக்கு இலட்சங்கள் தான் சம்பளம் . அவர்களில் இப்போதைய மார்க்கடில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் முதல் இடம் அனுஷ்காவுக்குத்தான் . அவரை விட குறைவாகத்தான் ஏனைய நடிகைகள் . படம் வெற்றியோ, தோல்வியோ அவர்களின் சம்பளம் அப்படியே கொடுக்க வேண்டும் . வெற்றி படங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவர்களின் சம்பளம் இன்னும் உயரும் . ம்ம்மம்மம்ம்ம்ம் அம்மாடியோவ் .
4 comments:
தலைச்சுத்துங்க...
எல்லாம் ஏழைங்க பணங்க...
தற்ப்போது நடுத்தரக்குடும்பம் மாதம் ஒரு பட்ததிற்க்கு கூட போக முடியாமல் திண்ணடாடுகிறார்க்ள..
திரையரங்கில் அவ்வளவு கட்டணம்...
நடிகர்கள் தன்னுடைய சம்பளத்தை குறைத்தால் தமிழ் சினிமா செழிக்கும்
அடேங்கப்பா என்று சொல்லத்தோன்றுகிறது. நடிகைகளில் த்ரிஷா மற்றும் இலியானா இருவர் மட்டும் கோடிகளில் வாங்குகிறார்கள் என்று கேள்விபட்டேன்.
ம்ம்மம்மம்ம்ம்ம் உண்மைதான் .
நடப்பதை காண வேண்டியது தான்
நன்றி சௌந்தர்
ம்ம்ம் தலை சுற்றுதெல்லோ............
நன்றி பாலா
Post a Comment