Friday, October 28, 2011

வேலாயுதம் விஜயின் இன்னொரு கில்லி

http://3.bp.blogspot.com/_Uno_emuDLJc/THYsFJkK90I/AAAAAAAAHlE/scmBw7aN0_4/s1600/Vijay-Hanisika+Motwani-Velayutham.jpg
தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம் ஜனத்திரல் காட்சிகளாக திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது . விறு விருப்பு நிறைந்த விஜயின் கில்லி போல இருக்கிறது . இடைக்கிடை திருப்பாச்சி பட சாயலும் அடிக்கிறது . 

காவலன் படத்துக்கு பிறகு வெளிவந்த இந்த படம் விஜய்க்கு இன்னொரு ஹிட் படமாக இருக்கும் . பொதுவாக நாம் விஜயிடம் இருந்து எதை எதை எதிர்பார்ப்போமோ அதனை இந்த படத்திலும் கொடுத்து இருக்கிறார் . சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது . நல்ல பாடல்கள் . சிறப்பான நடன அமைப்பு , அசைவுகள் . விஜய் நடனக் காட்சிகளில் பின்னி எடுத்து விடுவார் . அது நமக்கு தெரிந்தது தானே . 
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/velayutham-vijay-hansika-motwani-stills.jpg
விஜயின் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும் . விஜயிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் கிடைக்கும் . பொதுவாக விஜய் படம் என்றால் வித்தியாசமான கெட்டப்பில் அசத்துவார் என்றெல்லாம் நாம் நினைத்தால் தப்பு . அது சூர்யா , விக்ரம் போன்றோர் செய்வது . மூன்று மணித்தியாலமும் சந்தோசமாக படத்தை ரசித்து விட்டு வர வேண்டியது தான் . லாஜிக் எல்லாம் எதிர்பார்க்க கூடாது இப்போதைய படங்களில் எல்லாம் . 
http://accesskollywood.com/akd-images/news-images/velayutham-vijay-28-09-11.jpg
பெரிதும் எதிர்பார்த்து போவதை விட விஜய் படம் பார்க்க போகிறோம் என்ற நினைப்போடு போவோருக்கு படம் பிடிச்சிருக்கும் . பருவாயில்லை படம் பார்க்கலாம் . ரசிக்கலாம் . விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி படமாக மாற்றி விடுவார்கள் . 
http://www.tamilstar.org/cinema-images/video/thumbs/velayutham-vijay-17-08-11.jpg
ஹன்சிகா , ஜெனிலியா இருவரும் அழகு . சந்தானத்தின் காமடி படத்தில் ஒன்றாக ஒன்றிப் போகிறது . சொன்னால் புரியாது பாடல் கேட்கும் போது விஜய் நம்மை பார்த்து பாடுவது போல் ஓர் உணர்வு . அதாவது ரசிகர்களை பார்த்து என்று சொல்ல வந்தேன் . ரத்தத்தின் ரத்தமே பாடல் நெகிழ வைக்கிறது . சரண்யா மோகன் ரொம்ப அழகாகவும் இருக்கிறார் . விஜயின் தங்கையாக வந்து அசத்தி இருக்கிறார் .
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/velayutham-vijay-hansika-motwani-saranya-stills-281x300.jpg
சில்லக்ஸ் பாடல் ஏதோ ஒரு பாடலின் சாயல் அடிக்கிறது . முளைச்சு மூணு பாடல் இயற்கை அழகை அப்படியே அள்ளுகிறது . அத்தனை ரம்மியமாக இருக்கிறது . மாயம் செய்தாயோ பாடல் சூப்பர் . விஜயின் கெயார் ஸ்டைல் நல்லா இருக்குது . 
http://www.actorvijay.net/phpThumb/image/Velayutham-095.jpg
எல்லோருக்கும் வயது கூடிக் கொண்டே போகிறது . ஆனால், விஜய் அப்படியே இருக்கிறார் . அப்போ பார்த்த மாதிரியே இப்போதும் அப்படியே இருக்கிறார் . இளமையுடன் . ஆடல் , பாடல் , சண்டை , காட்சி , கதை என எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது வேலாயுதம் . 

எனக்கு பிடிச்சு இருக்கு . படம் பார்க்கலாம் . விறுவிறுப்பாய் இருக்கிறது . விஜய் ஜெயிச்சிட்டாரு...................





11 comments:

Unknown said...

படம் ஹிட்டு!

விச்சு said...

படத்தப் பார்த்திருவோம்.

r.v.saravanan said...

பகிர்வுக்கு நன்றி படம் பார்க்கிறேன்

kudanthaiyur.blogspot.com

Unknown said...

விஜய் நடித்த நல்ல படம் பார்த்து நாளாகிவிட்டது. பட்ம் பார்க்கும் ஆவலை ஏற்படித்தியுள்ள பதிவு.பார்க்கலாம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்... விஜய்க்கு இந்தப் படம் விமோசனம். அப்படித்தானே...

BC said...

ஆடல் , பாடல் , சண்டை , காட்சி , கதை என எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது வேலாயுதம் .

ஆடல் ok
பாடல் ok
காட்சி ok
கதை ok
சண்டை (X)
பவி இப்படி சொன்னபடியால் வேலாயுதம் படத்தை ஒருக்கா பார்க்க வேண்டியது தான்.

Pavi said...

நன்றி சிவா

Pavi said...

நன்றி விச்சு

Pavi said...

நன்றி செழியன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி குமார்

Pavi said...

நன்றி வருண்