Sunday, December 18, 2011

திரைப்படங்களில் அதிகரித்துக் காணப்படும் வன்முறைகள்



இப்போது எல்லாம் நாடகங்கள் , திரைப்படங்கள் போன்றவற்றில் அதிக வன்முறைக்காட்சிகள் காணப்படுகின்றன . ஆபாச நடனமும் , பாடல்களும் அதிகரித்து இருக்கின்றன . ஆகா இந்த பாடல் கேட்க அருமையாக இருக்கிறதே என்று நினைத்தால்  அந்த பாடலை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது . 

திரைப்படங்களில் ஒரே இளையர்களை சீரழிக்கும் மது பாவனை , கலாசார சீரழிவு , சிகரட் பாவனை என எல்லாவற்றிலும் இளம்பராயத்தினரை சீரழிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன . வெட்டு, குத்து என வன்முறைக் காட்சிகள் அதிகம் . 

கலாச்சார உறவுமுறை சீரழிவு , குத்தாட்டம் , கும்மாளம் என்று எமது கலாசாரத்துக்கு எதிரான நிகழ்ச்சிகள் . இதனால் , இளம்பராயத்தினர் இளம் வயதில் இந்த திரைப்படங்களை பார்த்து சீரழிகின்றனர் . அவர்கள் போல் தாமும் நடந்து கொள்கிறார்கள் . 

இளம் பெண்கள் குட்டை பாவாடையும் , டீசேட்டும் அணிந்து நடிகைகள் போல் தாமும் இருக்க வேண்டும் என்று நினைத்து நடக்கிறார்கள் . அழகு அழகு என்று அழகுக்கலை நிலையங்களில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள் . 

எல்லோரும் உட்காந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை . இப்படி வன்முறை காட்சிகளும் , கலாசார சீரழிவுகளும் திரைப்படங்களில் அதிகம் இடம்பெறுகின்றன .