Thursday, December 22, 2011

சிம்புவின் ஒஸ்தி எப்படி ?


http://www.simbufanclub.com/wp-content/uploads/2011/05/simbu-osthi-movie-photos-03.jpg
இப்போது திரை அரங்குகளில் பாக்ஸ் ஆபீசில் முதலிடமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ஒஸ்தி . சிம்பு, ரிச்சா, சந்தானம், சோனு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள் . சிம்புவுக்கு இந்த படத்தில் பொலிஸ் வேடம் . இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய தபாங் என்ற படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் . 

ஆக்சன், துள்ளல் , நகைச்சுவை என எல்லாம் சேர்ந்த மாஸ் படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது . பாடல்களும் துள்ள வைக்கின்றன . ‘ஒஸ்தி மாமே’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மங்காத்தா படத்தின் நூறாவது நாள் அன்று ஒஸ்தி வெளியிடப்பட்டது . அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது  நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விடயம் .
http://images.news.pluzmedia.com/slide/big_7_Crores_collected_on_first_day_of_Osthi-46f85db93132fd8b0e0d7840d3f9b502.jpg
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு இந்தப் படத்தில் ஒஸ்தி வேலன் என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறார் . சந்தானம் நகைச்சுவையில் கலக்குகிறார் . சிம்புவின் வெற்றி படத்தில் இதுவும் ஒன்றாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் . 




No comments: