Saturday, December 24, 2011

எல்லோரும் சந்தோசமாக நத்தாரை கொண்டாடுங்கள்


http://vintageholidaycrafts.com/wp-content/uploads/2008/11/vintage-santa-claus-chimney-sack-toys-christmas-cards.jpg
மார்கழி மாதம் பிறந்து விட்டாலே எல்லோருக்கும் சந்தோசமும் , குதூகலமும் தான் . கிறிஸ்மஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தாவும் , கிறிஸ்மஸ் மரமும் , அழகான கண்கவர் மின்விளக்குகளும் தான் . 

வீதிகளில் அலங்காரங்கள் செய்தும் , வியாபார நிறுவனங்களில் அழகான கிறிஸ்மஸ் மரங்களும் , விளக்குகளும் கண்களை கவரும் விதமாக இருக்கும் . கடைகளில் எல்லாம் கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் ஒழித்துக் கொண்டு இருக்கும் .
http://2.bp.blogspot.com/-T1h0sXNHp1I/TucHjjrm-qI/AAAAAAAAAWc/24j0qxQKm3c/s1600/Archies+Christmas+Cards3.jpg
ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமாக அலங்காரமாக சோடித்து அழகான பெரிய கேக் செய்து அசத்துவார்கள் . அல்லது அழகான கிறிஸ்மஸ் மரங்கள் தங்கத்தில் செய்து பார்ப்பவர்களை மயங்க வைப்பர், பெரிய அதிக நீளமான அலங்கார விளக்குகளை எரியவிட்டு  இருப்பர். பார்ப்பவர்களை சந்தோசப்படுத்தும் விதமாகவும் , அதிசயிக்க வைப்பதாகவும் அமைந்திருக்கும் .

இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். எல்லோரும் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள் . 

எல்லோரும் சந்தோசமாகவும் , குதூகலத்துடனும் கிறிஸ்மஸ் கொண்டாடுங்கள் . அனைத்து நண்பர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . 








5 comments:

r.v.saravanan said...

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் . நன்றி சரவணன்

சித்தாரா மகேஷ். said...

அனைத்து உறவுகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Pavi said...
This comment has been removed by the author.
Pavi said...

நன்றி சித்தாரா