Monday, January 2, 2012

ஆடம்பர செலவை குறைப்போமா ???

 http://static8.businessinsider.com/image/4bc36faf7f8b9ad554660300/customer-shopper-shopping-bags.jpg

இந்த வருடத்தில் உங்களது திட்டம் என்ன என்று பலரையும் கேட்டால் அவர்கள் முதலில் சொல்வது தாம் ஆடம்பர செலவுகளை இந்த வருடத்திலாவது குறைக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள் . இது பலரும் சொல்லும் விடயம் . 

அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் ஆடம்பர செலவுகளுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள் . ஒவ்வொரு நாடுகளிலும் வேலையில்லா பிரச்சனை , பொருளாதார நெருக்கடி , சனத்தொகை அதிகரிப்பு என்று ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன .
http://blogs.ubc.ca/comm101assignments/files/2010/12/Shoppers.jpg
இப்போது வீடுகளிலும் ஒருவர் சம்பாதித்து குடும்ப செலவுகளை கொண்டு நடத்த முடியாது . இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆகிவிட்டது . இருந்தும் சில வீடுகளில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள் . அந்த வீட்டில் நிர்வாகம் சரியாக இருக்கின்ற படியால் அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் . திட்டமிட்டு செலவழிக்கிறார்கள் . ஆடம்பர செலவுகள் குறைவு அதுதான் அவர்களின் சந்தோசத்துக்கு காரணம் .

ஆடம்பர செலவு என்று கூறுவது தேவையில்லாத பொருட்களை கடைகளுக்கு போனால் பார்த்ததும் வாங்குவது , உடனே பார்த்ததும் அந்த பொருளை பற்றியோ , விலையை பற்றியோ பாராது உடனே வாங்குவது , ஆடைகளை கடைகளில் அதிகம் அள்ளிக் கொண்டு வந்து அவற்றை போடாமல் பெட்டிக்குள் அப்படியே வைத்திருப்பது , பல வகைகளை அதிகம் வாங்கி வைத்துவிட்டு அது அழுகியதும் குப்பைக்குள் வீசுவது , சாப்பாடுகளை அதிகம் செய்து மீதி இருந்தால் அவற்றை கொட்டுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .
http://www.travelodestination.com/wp-content/uploads/2009/10/Culinary_Travel.jpg
கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு திட்டமிட்டு செலவழிக்க வேண்டும் . எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள் . பக்கத்து வீட்டு பெண் என்ன சாரி கட்டுகிறாரோ அதே போல் தனக்கு வேண்டும் என்று சில பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் . அவர் வசதியான பெண் . அவளுக்கு வாங்க வசதி உண்டு . ஆனால், நம்மிடம் அவளை போல் வசதி உண்டா ? என்று நாம் சற்று சிந்திக்க வேண்டும் . நமது தகுதிக்கு ஏற்ப ஆசைப்பட வேண்டும் . 

பெண்கள் பலர் அதிகமாக செலவு செய்வது தமது அழகை மேம்படுத்தவும் , அவர்களின் உடை அலங்காரத்துக்கும் தான் . இந்த செலவுகளை நீங்கள் ஒரு குடும்பம் என்று போனவுடன் உங்களது வசதிக்கு ஏற்ப அவற்றை தெரிவு செய்து செலவுகளை குறைக்க முயலலாம் .

வருமானத்தில் சிறிதளவை சேமிக்கலாம் . அந்தரம் , ஆபத்து வேளைகளில் உடனே உதவும் . மற்றவர்களிடம் போய் கடன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை . ஆடம்பர செலவுகளை நாம் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தால் நாம் சிக்கனமாக , சேமிப்புடன் எதிர்காலத்தில் சந்தோசமாக வாழ முடியும் . 







2 comments:

ஜெய்லானி said...

பல பேர் தற்பெருமைக்காகவேதான் அதிக செலவு செய்கிறார்கள் . இது மாறனும் :-)

அருகையான பதிவு பவி :-)

Pavi said...

உண்மைதான் . நீங்கள் சொல்வது .
நன்றி ஜெய்லானி .