நாம் உயிர்வாழ , நோய் நொடி இன்றி வாழ சத்தான உணவுகளை உண்ண வேண்டும் . ஆரோக்கியமான வாழ்வு வாழ ஆரோக்கியமான உணவுகளை நாம் உண்ண வேண்டும் . எம்மில் எத்தனை பேர் ஆரோக்கியமான உணவுகளை உண்கின்றோம் ?
ஆரோக்கியம் என்பது நம் உடல்நிலைக்கு ஏற்ப , தேவையான அளவோடு , தேவையான சத்துகள் நிறைந்த உணவுகளில் தான் இந்த ஆரோக்கியம் உண்டு . நாம் நொறுக்குத்தீனி உணவுகளை உண்பதன் மூலம் எமக்கு ஆரோக்கியம் கிடைத்து விடாது . நான்கு , ஐந்து தடைவைகள் உண்பதும் ஆரோக்கியம் ஆகாது .
ஒரு நேரம் வடிவாக சாப்பிட்டாலும் சத்தான உணவுகளை உண்டால் போதும் . விரும்பிய சாப்பாடு என்றால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு , எமக்கு விரும்பாத உணவு என்றால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போவதில் என்ன ஆரோக்கியம் இருக்கப் போகிறது ? சோறை குறைத்து சத்தான உணவுகளை அதிகம் உண்டால் போதும் .
ஒவ்வொரு நாளும் கீரை , பழங்கள், காய்கறிகள் என்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் . அதோடு ஒரு மரக்கறி வகைகளை உண்ணாமல் சத்தான மீன் வகைகளையும் உண்ண வேண்டும் . மீனில் புரதம் , கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன . விட்டமின்களும் உண்டு . கண்பார்வைக்கும் , சருமத்தின் பொலிவுக்கும் , நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் சிறந்தது .
நோய்வாய்பட்ட ஒருவர் எத்தனை தடவை உணவு உண்ண வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும் என்று வைத்தியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் . ஒருவரது வயது, பால் , எடை , உடல் உழைப்பு என்பவற்றை பொருத்தும் அவர் எவ்வளவு உணவை உட்கொள்ள வேண்டும் என்ற அளவு உள்ளது . இவற்றை பொறுத்து நீங்கள் உங்களது உணவுகளை உட்கொள்ளலாம் .
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவும் , நீரும் , சுத்தமான காற்று மிகவும் முக்கியம் ஆகிறது . ஆரோக்கிய வாழ்வு தான் குடும்பத்தின் மகிழ்ச்சி .
2 comments:
நம் உணவுப்பழக்கம் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். உங்கள் பதிவில் இருக்கும் படங்கள் அதை உணர்த்துகின்றன.
//விரும்பிய சாப்பாடு என்றால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு , எமக்கு விரும்பாத உணவு என்றால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போவதில் என்ன ஆரோக்கியம் இருக்கப் போகிறது ? சோறை குறைத்து சத்தான உணவுகளை அதிகம் உண்டால் போதும் .//
வயிறு நிறையா விட்டால் சாப்பிட்ட திருப்தியே இல்லைன்னு சொல்லுகிற ஆட்கள் இருக்கும் வரை ...ஒன்னுமே சொல்லுவதுக்கில்லை :-))
Post a Comment