Monday, January 23, 2012

நண்பன் படம் சூப்பரோ சூப்பர்


http://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/04/nanban-stills.jpg
சரிந்திருந்த தனது மார்க்கட்டை வேலாயுதம் படத்துக்குப் பின்பு நண்பன் படம் மூலம் நிமிர்த்தி உள்ளார் விஜய். தனக்கும் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியும் . ஜீவா , ஸ்ரீகாந்த் ஆகியோர் தமது நடிப்பை விஜய்யுடன் சேர்ந்து அபாரமாக வெளிப்படுத்தி உள்ளனர் .

இந்தியில் வெளிவந்த படத்தை பார்த்தவர்கள் இந்த நண்பன் படத்தை பார்க்க வருகிறார்கள் . ஏனெனில் அந்த படம் போல் நம்ம தமிழ் நடிகர்களும் நடித்து உள்ளனரா , அந்தந்த வேடங்களுக்கு இவர்களும் பொருந்துகிறார்களா? அவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது . இவர்கள் இந்த படத்தில் நம்ம தமிழ் நடிகர்கள் எப்படி நடித்து உள்ளனர் என்று ஒரு கூட்டம் இந்த படத்தை பார்க்க வருகிறது .
http://chennai365.com/wp-content/uploads/movies/Nanban/Nanban-Stills-15.jpg
வேறு சிலர் இந்தியில் இந்த படத்தை பார்க்கவில்லை . அவர்களுக்கு இது புதிய கதை . வித்தியாசமான நடிப்பாக இருக்கிறது . கதையும் வித்தியாசமாக இருக்கிறது . நகைச்சுவைகளும் இருக்கின்றன . பஞ்ச வசனங்களும் இல்லை . அடிதடி , குத்து , வாள்வெட்டு என்ற ஒன்றும் இல்லை . வில்லன்களின் தொல்லையும் இல்லை . இதனால் படம் எல்லோரையும் கவர்கிறது . 
http://tamilwire.com/images/2011/12/Nanban-620x425.jpg
இன்னும் சிலர் விஜய் ரசிகர்கள் , ஜீவா ரசிகர்கள் , ஸ்ரீகாந்த் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு படம் பார்க்க வருகிறார்கள் . இதனால் நண்பனுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது . வேற்று மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலர் சேர்ந்து நடிக்கும் போது நம்ம நடிகர்கள் ஏன் சேர்ந்து நடிக்கிறார்கள் இல்லை என்ற கவலையை இந்த நண்பன் படம் போக்கி இருக்கிறது . அங்கு வசூலும் ஆகிறது . போட்ட முதலுக்கு மேலாக வசூலை வாரிக் குவிக்கிறார்கள் இந்தியில் . இங்கும் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் போது படங்களும் வசூலை பெரும் . படமும் வெற்றி பெரும் தானே .
http://g.ahan.in/tamil/Nanban120105/Nanban%20(41).jpg
ஆனால் , எதற்க்கும் சிறந்த கதையம்சம் முக்கியம் . நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களுக்கும் அவர்கள் நடிப்புக்கு ஏற்ற சம உரிமை இருக்கிறது . தமது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தும் இருக்கிறார்கள் . நல்ல திரைக்கதை இருக்கும் பட்சத்தில் நடிகர்களுக்கு சரிக்கு சமமான அந்தஸ்து இருக்கும் இடத்தில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கலாம் . 

உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள் . அதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற கருத்தை சொல்லி இருக்கிறது நண்பன் படம் . சங்கர் 3 இடியட்ஸ் படத்தை சிதைக்காமல் அந்த படத்தை இயக்கிய விதம் பாராட்டும்படியாக உள்ளது .
http://1.bp.blogspot.com/-WTCDMwg9o5w/TxOaxzIG_6I/AAAAAAAAEIQ/dMo2tL-Fy7k/s1600/nanban.jpg

படம் பார்க்கும் போது இது விஜய் தானா என்றும் எண்ணத்தோன்றுகிறது . எதிரிகளை துரத்தி பந்தாடுவது , பஞ்ச வசனம் பேசுவது  என்றில்லாமல் எல்லா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளார் . விஜயின் துள்ளத மனமும் துள்ளும் படத்துக்குப் பிறகு இந்த படத்தில் விஜயை பிடித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் . படத்தில் சில காட்சிக்க சிரிப்பதோடு நின்று விடாமல் சிந்திக்கவும் செய்கின்றன . 

சத்யன் கலக்கி இருக்கிறார் . அவர் பேசும் மேடைபேச்சில் ஒரு சிரிப்பொலி தான் . ஹரிஷின் இசையில் பாடல்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கிறது . இம்முறை பொங்கலுக்கு வெளிவந்து நண்பன் வசூல் வேட்டையில் இறங்கி வசூல் மலை பொழிகிறது . விஜய் ரசிகர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கவில்லை . எல்லா ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள் . எல்லோருக்கும் படம் பிடித்து இருக்கிறது .
http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/24NANBAN2.jpg.crop_display.jpg
இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டு இருக்கிறது நண்பன் . இப்படியான நல்ல படங்களுக்கு வரவேற்பு எப்பவும் ரசிகர்களிடத்தில் இருக்கும் . 
 

நண்பன் அதிரடி - சரவெடி- வசூல்மழை 


4 comments:

r.v.saravanan said...

nanban parthitten pavi

ராகுல் said...

super

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி ராகுல்