எமக்கு எந்தவித இரத்த சொந்தமோ , உறவோ இல்லாமல் நம் மீது ஒருவர் அன்பு செலுத்துகிறார் என்றால் அவர் உற்ற தோழனாகவோ, தோழியாகவோ இருப்பார் . ஒன்றில் இருவரும் ஒன்றாக படித்து நண்பர்கள் ஆகி இருக்கலாம் .
அல்லது ஏதாவது ஒரு இடத்தில் பார்த்து , பேசி நண்பர்கள் ஆகி இருக்கலாம் . அல்லது ஒரு உறவினருடைய தெரிந்த நபர் ஒருவர் நம்முடன் கதைத்து பேசி நமக்கு நண்பர்களாக கிடைத்து இருக்கலாம் . இப்படி பல வழிகளில் எமக்கு நட்பு கிடைக்கிறது . வயது வித்தியாசமின்றி , இன வித்தியாசமின்றி எமக்கு பல நண்பர்கள் இருப்பார்கள் . அதில் எத்தனையோ பேர் சுயநலனுக்காக நண்பர்களை வைத்திருப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
தமது காரியங்கள் தமது நண்பன் மூலம் நிறைவேறி விட்டால் அவனது நட்பை கலட்டி விட்டு வேறு ஒருவருடன் நட்பாக இருப்பார்கள் . இதில் ஆணோ, பெண்ணோ விதி விலக்கில்லை. நண்பர்களுக்கு நண்பர்கள் பொறாமை , சண்டை, சச்சரவு இருக்கக் கூடாது . ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே போய் உதவி செய்கிறான் நண்பன் அவன் தான் சிறந்த நண்பன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றதும் உதவுகிறான் அங்கே தான் அவன் உயர்ந்த இடத்தில் இருக்கிறான் .
ஒருவனுக்கு ஒரு சிறந்த நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் . என் நண்பன் போல வருமாடா ? என்று சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும் . அப்படி நம்மில் எத்தனை பேர் இருக்கின்றோம் ? தனது உயிரையும் பெரிதாக நினைக்காமல் நண்பனுக்காக உதவுகிறான் . அவனை என்னவென்று சொல்வது ? தொப்புள் கொடி உறவா ? சகோதரனா ? இல்லையே. இவை அனைத்துக்கும் மேல் என்று தான் நான் எனது நண்பனை சொல்லுவேன் .
எல்லோருக்கும் நல்ல நண்பர்கள் எளிதில் கிடைப்பதில்லை . கிடைத்தாலும் அவர்களின் நட்பு அதிக நாட்கள் நீடிப்பதில்லை .
6 comments:
எல்லோருக்கும் நல்ல நண்பர்கள் எளிதில் கிடைப்பதில்லை . கிடைத்தாலும் அவர்களின் நட்பு அதிக நாட்கள் நீடிப்பதில்லை .
ரொம்ப சரியா சொன்னீங்க.
ஒருவனுக்கு ஒரு சிறந்த நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்
அருமையான கருத்துகள் பாராட்டுக்கள்.
சிறந்த நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்
பவிக்கு இனிய புது வருட வாழ்த்துக்கள்.
Classiindia - No.1 Claasified, Tamilnadu free online Classified Website , Chennai Free Ads , india Classified , Buy & Sell , Real Estate , Jobs, Educations , Services, Pets, Electronics , More Services Visit - www.classiindia.in
really nice lines..u know i got two friens like that...its wowwwwww...lets meet again.
Post a Comment