Friday, June 22, 2012

நகைச்சுவை படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள்



இப்போது எல்லாம் எந்தமாதிரியான படங்கள் அதிகம் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் அது நகைச்சுவை படங்களுக்குத்தான் . தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள் . ஏன் குறைந்து விட்டது என்று எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும் . ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் , அடிதடி , ரீமேக் என்று ஒரே மாதிரி இருந்தால் ரசிகர்களுக்கும் அலுப்புத்தான் வருகிறது .

தியேட்டருக்குள் ரசிகர்கள் கொட்டாவி தான் விடுகிறார்கள் .படம் முடியும் வரை தியேட்டர் கதிரையில் ஒட்டி , படத்துடன் ஒன்றி , படத்தை ரசிக்க வேண்டும் . விறுவிறுப்பான , சிறந்த திரைக்கதை உள்ள , நகைச்சுவையான , உயிரோட்டமான நடிப்புள்ள படங்கள் வெற்றி அடைகின்றன . இன்று அதிகமான படங்கள் நகைச்சுவைக்காகவே பல நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடுகின்றன .

நிம்மதி , அமைதி தேடி அலையும் காலம் . வாய்விட்டு சிரிக்க கூட நேரமில்லை . இயந்திர வாழ்க்கை . அப்படியான கால கட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம் . மூன்று மணி நேரம் நிம்மதியாக , சந்தோசமாக , வாய்விட்டு சிரித்து சந்தோசமாக இருக்க நகைச்சுவை படங்களுக்கு முக்கியம் தருகிறான் ரசிகன் . 

படத்துடன் ஒன்றி போகிறான் , விவேக் , சந்தானம் , வடிவேலு என நகைச்சுவை நாயகர்கள் படங்களில் இருக்கும் போது நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது . இவர்களுடன் படத்தின் ஹீரோவும் சேர்ந்து நகைச்சுவையாக நடிக்கும் போது இன்னும் படத்துக்கு பிளஷ் தான். இப்போது வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி , கலகலப்பு படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது .

ஒரே சென்டிமென்ட் , அடிதடி எல்லாம் எத்தனை தரம் தான் பார்க்கிறது . நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் இப்போது அதிக கிராக்கி நிலவுகிறது . இரவு நேரங்களில் ஒவ்வொரு படங்களினதும் நகைச்சுவை காட்சிகளை  ரசித்து பார்ப்பதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள் . ஓய்வு நேரங்களை நகைச்சுவைகளை கேட்பது , ரசிப்பது என பொழுதுகளை சந்தோசமாக கழிக்கிறார்கள் .

படங்களின் வெற்றிக்கு நகைச்சுவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன . சிறந்த பாடல்கள் , இசை என்பனவும் அடங்கும் . அதனுடன் சிறந்த திரைக்கதை , நடிப்பு இருக்கும் பட்சத்தில் படம் சூப்பர் , டூப்பர் ஹிட் தான் . அதில் எவ்வித சந்தேகமும் இல்லை . 

4 comments:

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான் பவி...
இப்ப கதையோட படங்கள் வந்தாலும் நகைச்சுவை காட்சிகள் இருந்தால் கண்டிப்பாக ரசிக்கப்படிகிறது.

r.v.saravanan said...

நகைச்சுவை எனக்கு பிடித்த ஒன்று

அந்த வகையில் நகைச்சுவையோடு கூடிய கதை உள்ள படங்கள் ரசிக்க வைக்கிறது

Pavi said...

ம்ம்ம் உண்மைதான். நன்றி குமார்

Pavi said...

நன்றி சரவணன் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்