Thursday, July 12, 2012

மனம் விட்டு பேசுங்கள்



இன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடியாத நவீன உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் . மனம் விட்டு பேசாததனால் தான் பிரச்சனைகளும் எழுகின்றன . 

மனம் விட்டு பேசாததனால் நண்பர்களிடையே பிரிவு ஏற்படுகிறது . கணவன் , மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு பிரிவு உண்டாகின்றது . ஒருவர் மீது இன்னொருவருக்கு சந்தேகம் உண்டாகின்றது . அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் . அதற்க்கு நண்பர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேச வேண்டியது அவசியம் . அப்போதுதான் அவர்களின் பிரச்சனை தீரும் .

அப்பாவுக்கும் மகனுக்கு அடிக்கடி மன கஷ்டம் , சண்டை என்பன வரும் . அம்மா தான் இருவருக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைப்பார் . என்ன நடந்தது என்று மகனிடம் தந்தை கேட்க மாட்டார் . வீணாக சண்டை பிடிப்பார் . மகனிடம் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால் , மனம் விட்டு பேசியிருந்தால் பிரச்சனையை தீர்த்து விடலாம் . 

கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சனைகள் தான் அதிகம் ஏற்படுகின்றன . எத்தனையோ தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர் . விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள் . இதற்க்கு எல்லாம் காரணம் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசாமை தான் காரணம் . ஒருவர் மீது மற்றவர் அன்பு வைத்திருக்கிறார்கள் . பிரச்சனைகள் என்று வரும் போது அவற்றையும் சமாளித்து வாழ வேண்டும் . 

கணவனுக்கு நம்பிக்கைக்கு ஏற்ப மனைவி நடந்து கொள்ள வேண்டும் . அதேபோல் கணவனும் தனது மனைவி சந்தேகிக்கும் படியாக நடந்து கொள்ளுதல் கூடாது .ஒவ்வொருநாளும் அன்றாட பிரச்சனைகளை அலசி ஆராய வேண்டும் . சந்தோசங்கள் , துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் . அதற்க்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ளலாம் . அல்லது தேநீர் அருந்தும் போது ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளுதல் நல்லது .

என்ன நாம் இனி மனம் விட்டு பேசி சந்தோசமாக இருப்போம் . சண்டை வேண்டாம் . சச்சரவு வேண்டாம் . இனிமையான வாழ்க்கை தான் எல்லோருக்கும் வேண்டும் .

4 comments:

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியா சொன்னீங்க. மனம் விட்டு பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து போகும்.

Athisaya said...

பிரச்சனைகளுக்கு சுலபமான சரியான தீர்வு இதுதான்.பகிர்விற்கு வாழ்த்துக்கள் சொந்தமே.!
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே

Pavi said...

நன்றி தோழியே