Saturday, August 18, 2012

மற்றவர்களின் மனம் நோகாமல் நடக்க வேண்டும்



எல்லோரும் ஒவ்வொரு சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள் , வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காது . இது இயல்பான விடயம் . எமக்கு தெரிந்தவருக்கோ , அல்லது எமது நண்பனுக்கோ எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எமக்கு தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் .

எல்லோரிடமும் அன்பாக பேச வேண்டும் . சந்தோசமாக இருக்க வேண்டும் . அதிகம் கோபப்பட கூடாது  என்று சிறு வயதில் இருந்தே பெற்றோர் பிள்ளைகளை  வளர்க்கிறார்கள் . அதில் சில பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்து கொள்கிறார்கள் . சில பிள்ளைகள் அவற்றை காதில் போட்டு கொள்வதே இல்லை . 

ஒரு பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் உபசரித்து அவரை வரவேற்று ஆசனத்தில் அமரும்படி சொல்ல வேண்டும் . இப்போதைய காலகட்டத்தில் எத்தனை பேர் அப்படி எழுந்து பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் . வா, இரு , போ இதுதான் நடக்கிறது . வந்தவர்கள் சிலர் அவமானப்பட்டு போகும் நிலைமையும் உண்டு . 

ஒருவருடன் பேசும் போது அவரின் மனம் நோகாது பேச வேண்டும் . அவருக்கு பிடிக்காத விடயங்களை நாம் பேச கூடாது . இதனால் பிரச்சனைகள் தான் வரும் . அவர் கோபப்படுகிறார் என்று தெரிந்தால் அந்த விடயத்தை பற்றி பேசக் கூடாது . நாம் வீட்டில் இவற்றை கற்றுக் கொண்டால் நாம் எங்கு போனாலும் இந்தப் பழக்கம் கைகொடுக்கும் .

நாம் புதிதாக வேலைக்கோ போனால் என்ன , திருமணம் செய்து வேறு இடம் போனால் என்ன , தெரியாத ஒரு இடத்துக்கு போனால் என்ன நாம் எங்கும் சமாளித்துக் கொள்ளலாம் . எனவே மற்றவர்களை புரிந்து கொண்டு , மற்றவர்களின் மனம் கோணாது நடந்து கொள்வது நமது பேச்சிலும் , நடவடிக்கையிலும் தான் உள்ளது . 


1 comment:

ஸ்ரீ.... said...

இன்றைய காலத்துக்குத் தேவையான இடுகை.

ஸ்ரீ....