Thursday, October 4, 2012

கவிதை கிறுக்கல் ....



கண்ணாடி 


என் விம்பத்தை அப்படியே 

இன்னொரு உருவமாக 
பார்க்கிறேன் . என்ன 
நாம் பிறந்ததில் இருந்து 
பார்த்து பார்த்து 
நம்மையே ரசிக்க வைக்கிறது 
அது வேற ஒன்றும் இல்லை 
கண்ணாடி கண்ணாடி 

தவறு 

நாம் பல நேரங்களில் 
பிழை விடுகிறோம் 
தவறு என்று தெரிந்து 
சில காரியங்களை 
செய்கிறோம் , ஆனால்,
சில நேரங்களில் 
தவறு என்று தெரியாமல் 
தவறை செய்து விட்டு 
வருந்துகிறோம் -இது 
தான் மனித இயல்பு .

அன்பான நட்பு 

எங்கோ பிறந்து , வளர்ந்து 
எங்கையோ சந்தித்து 
நண்பர்கள் ஆகிறோம் 
எமது பிரச்சனைக்கு நண்பனிடம் 
தீர்வை கேட்கிறோம் . 
அன்பான நட்புக்கு கோபம் இல்லை, 
துரோகம் இல்லை . என்றைக்கும் 
அன்பு நீண்டு கொண்டு செல்லும் ...

காதல் அல்ல 

சொத்துக்காக, பணத்துக்காக 
ஒருவரை ஏமாற்றி இன்னொருவர் 
திருமணம் செய்து கொள்கிறார்களே 
இதையும் காதல் என்று சொல்லி 
கொச்சைபடுத்துகிறார்களே.......

பெற்றோரின் கஷ்டம்

பிள்ளைகளை கஷ்டப்பட்டு 
வளர்த்து ஆளாக்கியதும் 
அவர்கள் பட்ட கஷ்டத்தை 
எல்லாம் மறந்து பிள்ளைகள் 
தமது போக்கில் தாய், தந்தையரை 
விட்டு பிரிந்து தமக்கு என்று 
ஒரு வாழ்வை தேடி செல்கிறார்கள் 
எல்லாவற்றையும் இழந்து 
நிர்க்கதியாகி வயோதிப வயதில் 
தள்ளாடுகின்றனர் பெற்றோர் .
இன்றைய நிலைமை இப்படி இருக்கிறதே .......

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாற வேண்டியது : (தவறு) மனித இயல்பும், (பெற்றோரின் கஷ்டம்) இன்றைய நிலைமையும்...

நன்றி...

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை.