Monday, October 1, 2012

சிறுவர்களின் பெற்றோர்களுக்காக .........


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . அவர்களை நல்ல  பண்புகளுடனும் , பழக்கவழக்கத்துடனும் , பாசத்துடன் அன்பையும் காட்டி பெற்றோர் வளர்க்க வேண்டியது அவசியம் . இளம் பராயத்திலே சிறந்த அறிவுள்ள புத்திசாலியான பிள்ளையாக அவர்களை வளர்த்து இந்த உலகில் அவனும் ஒரு சிறந்த தலைமகனாக மிளிர வேண்டும் .

இன்று உலகம் பூராக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது . ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சிறுவர்களுக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று சிறுவர்கள் மன உளைச்சலுக்கும் , கல்வி அறிவின்றியும் , சிறுவயதில் பெற்றோரை இழந்து அநாதைகளாகவும் , சிறுவயதிலே கூலித்தொழில் செய்து தமது அன்றாட நாட்களை கடத்துகின்றனர் . 

வறிய சில நாடுகளில் சிறுவர்கள் சுத்திகரிப்பு பணிகளுக்கும், கூலி வேலைகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர் .இளம் வயதில் கல்வி அறிவின்றி வளரும் சிறார்கள் பெரியவனானதும் இந்த உலகில் அவனை கவனிப்பார் யாரும் அற்று ஒரு அடிமைத்தனுத்துக்குள் சிக்கி கொள்கிறான் . பெற்றோர்கள் தமது கஷ்டங்களையும் தமது பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். 

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் போது அவனுக்கு கஷ்ட, துன்பங்கள் தெரியாது வளருகிறான். வளர்ந்து அவனுக்கு ஒரு கஷ்டம் , துன்பம் வந்ததும் அதனை எதிர்கொள்ள பயப்படுகிறான். உடனே மனம் உடைந்து அதனை எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியாமல் திண்டாடுகிறான். எல்லோருடைய வாழ்விலும் கஷ்ட, துன்பங்கள் வரும் . அதனை எவ்வாறு சமாளித்து முன்னேறுவது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் . வசதி படைத்தவர்கள் அநாதை சிறுவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கல்வி செலவுகளை தாம் ஏற்று அவனை ஒரு சிறந்த மனிதனாக கூட மாற்றலாம் .

சிறுவர்களுக்கு சிறு வயதிலே சேமிப்பு பழக்கத்தை பழக்க வேண்டும் . தேவையற்ற செலவுகளை குறைத்து எவ்வாறு சேமிப்பது பற்றி பெற்றோர் அறிவுரை நல்குவது அவசியம். 

ஒரு சிறுவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவனது பெற்றோர் , அவனிருக்கும் சூழல் என்பன காரணிகள் ஆகின்றன . எனவே சிறுவர்களை அடித்து திருத்துவதை விட , பேசி கத்துவதை விட அன்பால் அவர்களை திருத்த முயலுங்கள் . எதனையும் அன்பாக , ஆறுதலாக சொல்லி பாருங்கள் . அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை . 

 

3 comments:

Anonymous said...

superb article.............

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல (உண்மை) கருத்துக்கள் பல... நன்றி...

Pavi said...

நன்றி நண்பா .....