ஒவ்வொரு ஆண்டும் வந்து போகிறது
எமது வயதும் ஒவ்வொன்று கூடுகிறது
எல்லா ஆண்டும் போல இவ்வாண்டு
இல்லையே என ஏங்குகிறோம்
அல்லவா ? இந்த ஆண்டு முடியும்
தறுவாயில் ஒரு பெரிய குண்டை
தூக்கி போட்டு இருக்கிறார்கள்
உலகம் அழியப் போகிறது என்ற
பீதியை அல்லவா ?
யாரை பார்த்தாலும் இதே கேள்வி ,
இதே பயம் அல்லவா தொற்றிக் கொள்கிறது
இதென்னடா அநியாயம் என்று
மனம் ஏங்குகிறது அல்லவா ?
சிலருக்கு மரண பயம் கூட ஏற்பட்டு
விட்டது , சிலரோ பயப்பிடவே இல்லை .
எப்போதோ ஒருநாள் மரணம் நிச்சயம்
அது எப்போது வந்தால் என்ன என்கின்றனர்
இப்படி எல்லோராலும் இருக்க முடியுமா
இல்லையே - இறைவா இது என்ன சோதனை .
உலகம் அழியாது பயப்பிட வேண்டாம்
என்றால் கூட ஏதோ ஒரு பயம் நம்
எல்லோரையும் ஆட கொள்கிறது தான் .
சரி 21 ஆம் திகதி நெருங்குகிறது தானே
என்ன நடக்கிறது என்று பொறுத்திருப்போம் .
No comments:
Post a Comment