Monday, December 17, 2012

மனதை இதமாக்கும் இசை



 இசையால் மயங்காத மனம் உண்டா இந்த உலகில் . இசைக்கு மொழி ஒரு தடை இல்லை . எமக்கு புரியாத மொழியில் கூட நாம் பாடல்களை கேட்கின்றோம் . காரணம் எம் மனதை ஈர்க்கும் இசை தான் . இதயத்தை இதமாக்குகிறது . மனதை இலேசாக்குகிறது . 

நமக்கு கோபம் வரும் போது கூட எமக்கு பிடித்த பாடலை கேட்கும் போது  நமது கோபம் பஞ்சாகப் பறக்கிறது . கஷ்டப்பட்டு வேலை செய்து இரவு நேரங்களில் ஓய்வு எடுக்கும் போது மனதுக்கு இதமான பாடலை கேட்டுக் கொண்டு தூங்கும் போது எமது தூக்கம் கண்ணை தழுவுகிறது .

இசையால் இறைவனை கூட மகிழ்விக்கின்றோம் அல்லவா ? சிலருக்கு குத்து பாட்டு பிடிக்கிறது , சிலருக்கு மெலடி பிடிக்கிறது , சிலருக்கு சோகப் பாடல் பிடிக்கிறது . ஒவ்வொருவரின் ரசனையும் வேறு வேறாக இருக்கிறது . சிலருக்கு பாடல்களில் இசை பிடித்து இருக்கும் . சிலருக்கு பாடலில் உள்ள வரிகள் பிடித்து இருக்கும் , சிலருக்கு பாடலை பாடிய  பாடகரின் குரல் பிடித்து இருக்கும் 

எனவே , எமக்கு எந்த வயதானாலும் இசைக்கு நாம் எல்லோரும் அடிமை . இசை எமது வாழ்வோடு பின்னி பிணைந்தே உள்ளது . 

No comments: