Wednesday, December 12, 2012

நடிகர் ரஜனியிடம் உங்களுக்கு பிடித்த விடயம் ?



நடிகர் ரஜனியை பலருக்கு பிடிக்கும் . 12.12.12 இன்று ரஜனியின் பிறந்தநாள் . இன்று தனது 62 ஆவது பிறந்த தினத்தை அவரும், அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள் . இவருக்கு உலகம் பூராகவும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர் . தனது  கடின உழைப்பின் மூலம் கஷ்டப்பட்டு ஒரு ஸ்டார் ஆக இன்று மிளிர்கிறார் .

இவ்வளவு பிரபலமானதுக்கு முழுக்க முழுக்க காரணம் அவரது ஸ்டைலும் , நடிப்பும் தான். தனது படத்துக்கு தேவையான நடிப்பு, கம்பீரம் , ஸ்டைல் , பஞ்ச் வசனம் , பாடல்கள் எல்லாம் படத்தில் அனல் பறக்கும் . பஞ்ச்  வசனங்களில் பல அர்த்தங்கள் இருக்கும் . 

பலர் பழைய சம்பவங்களை மறந்தும் , பணத்திமிர் பிடித்தும் அலைகின்றனர் . அவர்களுக்கு மத்தியில் ரஜனி அவர்கள் அடக்கம் , பந்தா காட்டாமல் ஒரு எளிமையை கடைப்பிடிக்கின்றார் . அந்த எளிமை எல்லோருக்கும் வராது . இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ரஜனி தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை குறிப்பிட்டு உள்ளார் . "எந்த விசயத்தையும் நேர்முகமாக அணுகுங்கள் " என்று தனது ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார் . 

ரஜனி ஒரு ஆன்மீகவாதியும் கூட . எனக்கு ரஜனியின் ஸ்டைல் பிடிக்கும் . அதோடு அவரின் நடிப்பும் ரொம்ப பிடிக்கும் . பாட்சா , படையப்பா , முத்து , எஜமான் , எந்திரன் இன்னும் பல படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது . இன்று பிறந்தநாளை கொண்டாடும் ரஜனிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .




No comments: