படம்: வெள்ளித்திரை
பாடல் : விழியிலே என் விழியிலே
பாடியவர் : சித்ரா
சித்ராவின் அருமையான குரலும் , இசையும் , வரிகளும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது . அருமையான சோகப் பாடல் .
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் (விழியிலே )
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் (விழியிலே )
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையேடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே (விழியிலே )
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையேடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே (விழியிலே )
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாம்பூச்சி விளையாட நாம் காதல் பொம்மையா (விழியிலே )
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாம்பூச்சி விளையாட நாம் காதல் பொம்மையா (விழியிலே )
4 comments:
பாடல் வரிகளுக்கு நன்றி...
இந்த படம் சுமாராக இருந்தும் வெற்றி பெறவில்லை. பாடல் அருமை சகோ.
நன்றி தனபாலன். எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு
பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்கள். படமும் பார்க்கலாம் . நன்றி பாலா
Post a Comment