Friday, December 21, 2012

வாங்க strawberry பழம் சாப்பிடுவோம் ....


பழங்கள்  எல்லாவற்றிலும் ஒரு தனி இடம் உண்டு என்றால் அது strawberry பழத்துக்கு  மட்டுமே அந்த சிறப்பு உண்டு . பல வித சத்துகளை தன்னகத்தே கொண்ட பழங்களில் இதுவும் ஒன்று . ஒரு வித புளிப்புத்தன்மை கொண்ட பழம்  தான் strawberry. பலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது . பெண்களை பெரிதும் strawberry பெண்ணே என்று பாடல்களில் புகழ்வதும் உண்டு. 


எல்லோரும் எந்த நேரத்திலும் சாப்பிடலாம் . அதிக சத்துகள் நிறைந்தது. இந்த பழத்தில்  strawberry கேக் , ஐஸ்கிரீம் , ஜூஸ் , மில்க் என்பன செய்வார்கள் . பிரான்ஸ் , அமெரிக்கா , ஜேர்மன் , ஸ்பெயின் , ஜப்பான் போன்ற பல  நாடுகளில் இந்த பழம்  உற்பத்தி செய்யப்படுகிறது . அடர்ந்த சிகப்பு நிறத்துடன் கண்ணை கவரும் அழகுடன்  இருக்கும் இந்த பழம் . 

ஒரு நாளைக்கு 5 பழங்கள் சாப்பிட்டால் புற்று நோய் , இதய நோய்களில் இருந்து விடுபடலாம். விட்டமின் c , தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. 


இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். 


 உடல் பருமனையும் குறைக்கும் . strawberry பழத்தை சாப்பிட்டு வருபவர்கள் மிகவும் இளமையான தோற்றத்தை கொண்டிருப்பார். ஏழு , எட்டு வயது குறைவாக தெரிவர் . 

ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகோலுகிறது இந்த பழம் .உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும் .

மென்மையான , பட்டு போன்ற சருமம் வேண்டுமா  strawberry பழத்தை சாப்பிடுங்க,  strawberry மாஸ்க் போடுங்க,  strawberry ஜூஸ் குடியுங்க. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் . 

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல் பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்