Wednesday, January 2, 2013

2013 இல் உங்கள் இலக்கு என்ன ?



ஆண்டு ஒன்று போய் அடுத்த ஆண்டு ஒன்று பிறந்து இருக்கிறது . 2012 ஆன் ஆண்டை விடை கொடுத்து 2013 ஆம் ஆண்டை வரவேற்கின்றோம் . போன ஆண்டில் விட்ட தவறுகள், பிழைகள் இந்த ஆண்டு விடக் கூடாது . தொலைத்த சந்தோசங்களை பெற வேண்டும் . துன்பங்கள் அகன்று இன்பகரமான , சந்தோசமான ஆண்டாக எல்லா மக்களுக்கும் இந்த ஆண்டு அமைய வேண்டும் என பிரார்த்திப்போம் .

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இலட்சியம் , இலக்கு இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்தில் . படிக்க வேண்டும், பட்டம் பெற வேண்டும், நல்ல வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க வேண்டும். கல்யாணம் செய்ய வேண்டும். குழந்தை பெற்று குடும்பத்தில் சந்தோசமாக வாழ வேண்டும் . இப்படி ஒவ்வொரு வயது , கால கட்டத்தில் ஒவ்வொரு இலக்குகள் இருக்கும் . அவை ஒவ்வொன்றாகத்தான் அவற்றை அடைய முடியும். 

இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுத , இருப்பவர்களுக்கு , பல்கலை பட்டம் பெறுபவர்களுக்கு ஒரு சந்தோசம் தரும் ஆண்டாக இருக்கும் . பட்டம் பெற்று நல்ல தொழில் கிடைத்து சம்பாதித்து நம் பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . அது பெரிதும் 19 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டோரின் நிலைமை . 

அடுத்த கட்டம் 25 தொடக்கம் 35 வயது பிரிவினரை எடுத்துக் கொண்டால் ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை இந்த ஆண்டு கரம் பிடிக்க வேண்டும் . வாழ்வில் ஒரு சந்தோசமான காலகட்டத்துக்குள் நுழைய இருப்பர் . இவ்வளவு காலமும் இருந்த , வாழ்ந்த வாழ்க்கை வேறு இனி புதிய உறவுகள், சொந்தங்கள் சேரும் காலகட்டம் . ஆகவே இவர்கள் இந்த ஆண்டு சந்தோஷ ஆண்டாக , தமது வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்பார்கள் . அவர்களின் இலக்கு இது .

இனி 35 தொடக்கம் 50 வயது பிரிவினரை எடுத்துக் கொண்டால் அவர்கள் குடும்பத்தில் குழந்தைகள் பெற்று குழந்தைகளின் குறும்புகளை ரசித்து , அவர்களை படிக்க வைத்து இந்த சமுதாயத்தில் நட்பிரஜையாக வளர்த்து அவர்களின் சந்தோசமான தருணங்களை ரசிக்கும் காலம் .  

60 வயதுக்கு மேற்பட்டோரை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமது பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்து அவர்களின் பேரன், பேத்திகளும் சந்தோசமாக பொழுதை கழித்து மன நிறைவுடன் இருக்கும் காலம். சிலர் நூஇவாஇப்பட்டு தமது நோய்களில் இருந்து பூரண சுகம் அடைந்து இந்த ஆண்டு நோய்களில் இருந்து விடுபட்டு நாம் சந்தோசமாக இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு போக வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கும் கால கட்டம். 

எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இலக்கு இருக்கிறது . இந்த ஆண்டும் அவர்களின் இலக்குகள் இனிதே நிறைவேற வேண்டும். சந்தோசமான ஆண்டாக இந்த ஆண்டு எல்லோருக்கும் அமைய வேண்டும். எல்லோருடைய இலக்குகளும் நிறைவேற வேண்டும். 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சந்தோசமான ஆண்டாக இந்த ஆண்டு எல்லோருக்கும் அமைய வேண்டும்.
எல்லோருடைய இலக்குகளும் நிறைவேற வேண்டும்.

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்