இயற்கையின் கொடைகள் பல . அவற்றுள் ஒன்று கற்றாழை . நம் முன்னோர்கள் இயற்கை சார்ந்த பொருட்களை வந்தனர். நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம் . இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும் .
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்கள் நன்மை அளிக்கின்றன . இலவசமாகவே காடுகளில் இம்மருந்து தன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கின்றன . கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை ஆனது மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது . பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும் . இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன .
நீடித்த மலச்சிக்கலை போக்கவும் , வாய்வுத் தொல்லையை நீக்கவும் , வயிற்றின் சூட்டை தடுக்கவும் , தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது . சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது.
எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக் கூடியது . பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
சோற்றுக் கற்றாழை , கன்னி , குமரி , தாழை என்று பல பெயர்களில் கற்றாழையை அழைப்பர் . இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும். தளிர்பச்சை,இளம்பச்சை,கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை ,பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை ,செங்கற்றாழை, எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது . முகத்துக்கு பூசும் கிரீம்கள் , நகத்துக்கு பூசும் நகப்பூச்சு போன்றன இந்த கற்றாழையில் இருந்து தான் பெறப்படுகிறது .நம்மில் சிலர் வீடுகளிலும் கற்றாழை வளர்க்கிறார்கள் . நம்மில் பலருக்கு கற்றாழையின் மகிமை தெரிவதில்லை . தெரியாதவர்கள் கற்றாழையின் மகிமைகளை அறிந்து கொள்வோம் .
5 comments:
கற்றாழை குறித்த அருமையான பகிர்வு..
வாழ்த்துக்கள் பவி.
thanks kumar.
இந்த பகிர்வுக்கு நன்றி ! ஆனால் காற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறியத்தரவும்
கற்றாழையில் பல நன்மைகள் உண்டு.
Na use pannitu iruken..bt pimple athigama vara mathiri theriathu..verum aloe vera gel use panratha la pimple varutha?
Post a Comment