Saturday, March 23, 2013

நாம் நினைப்பது எல்லாம் நடக்கிறதா ?


எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும் . மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தீய , கெட்ட செயல்களை  கைவிட வேண்டும்    என்று நாம் நினைக்கிறோம் . நினைப்பது எல்லாம் நடக்கின்றதா இந்த உலகில் . 

எனக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம் , நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம் , நல்ல கணவனோ, மனைவியோ கிடைக்க வேண்டும், கைநிறைய சம்பளம் பெற வேண்டும், குழந்தைகள் பெற்று வாழ்வில் சந்தோசமாக இருக்க வேண்டும், அம்மா , அப்பாவை கடைசி காலம் வரை கண்கலங்காமல் பார்க்க வேண்டும் இப்படி ஒவ்வொருவரின் நினைவுகள் , கனவுகள் ஏராளம் . இவை அனைத்தும் எல்லோருக்கும் நடக்கின்றதா ? கனவுகள் நனவாகின்றனவா ?

எல்லோருக்கும் இவை அனைத்தும் நடப்பதுமில்லை . நிகழ்வதும் இல்லை . சிலருக்கு நடக்கிறது . சிலர் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் . சிலர் கிடைத்த வாழ்க்கையை வெறுக்கிறார்கள் . சிலர் எல்லாம் முடிந்தவுடன் தான் எல்லாவற்றையும் பற்றி யோசிக்கிறார்கள் . காலம் கடந்து விடும் அல்லவா ?

நாம் நினைத்தவை நிறைவேற வேண்டும்  என்றால் என்ன செய்யலாம் ? எல்லாம் நடப்பவை நடக்கட்டும் என்று இருப்பவர்களும் உண்டு. எது எனினும் அவன் செயல் . இறைவன் செயல் என்று இருப்போரும் உண்டு . 

நாம் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  தோல்விப் பாதைகளை வெற்றி பாதைகளாக மாற்ற வேண்டும் . தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டும். எமது முயற்சிகளை கைவிட கூடாது . பிரச்சனைகளில் இருந்து விடு பட வேண்டும். இறை நம்பிக்கை வேண்டும். 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னம்பிக்கை வரிகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

எங்கே வாழ்க்கை தொடங்கும்...? அது எங்கே எவ்விதம் முடியும்...?
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...
பாதையெல்லாம் மாறிவரும்... பயணம் முடிந்து விடும்...
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... தெய்வம் ஏதுமில்லை...
நடந்ததையே நினைத்திருந்தால்... அமைதி என்றுமில்லை...

'பரிவை' சே.குமார் said...

தன்னம்பிக்கை வரிகள் பவி...

Pavi said...

உங்கள் வருகைக்கும், பொருத்தமான பாடல் வரிகளுக்கும் நன்றிகள் .
நன்றி தனபாலன்