Friday, September 25, 2009

ஆதவனா ? வேட்டைக்காரனா ?

இந்த வருட தீபாவளிக்கு வர இருக்கும் படங்களில் சூர்யாவின் ஆதவனும் , விஜயின் வேட்டைகாரனும் இன்னும் பல படங்களும் வர இருக்கின்றன . முன்னணி நடிகர்கள் என்று பார்த்தால் இவர்கள் இருவருடைய படங்கள் தான் இந்த லிஸ்டில் உள்ளன. எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்போது தொடர்ந்து பல நல்ல கதையம்சமும் , நடிப்பும் , நல்ல பாடல்களும் , என்று வெற்றி பட நாயகன் வரிசையில் முன்னேறி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நம்ம நாயகன் சூர்யா.

கஜினி , பிதாமகன் , பேரழகன் , அயன் என பல வித்தியாசமான கதையம்சங்களுடன் வந்த படங்கள் நல்ல வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் வர இருக்கும் படமான ஆதவனுக்கும் நல்ல வரவேற்பு இப்பவே அதிகரித்து விட்டது.

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு, உடை அலங்காரம், வித்தியாசமான கெட்டப் என அசத்துவார் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம் .பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு இதமாக நன்றாக இருக்கின்றது . நல்ல சூப்பர் பாடல்கள் . கட்சி அமைப்பும் நன்றாகத்தான் இருக்கும் என நம்பலாம் ஏன் எனில் தயாரிப்பாளர் உதயநிதி பணத்தை வாரி இறைத்து இருப்பார். ஸ்டில்ஸ் பார்க்கும் போதும் விளங்குகிறது .

சூர்யாவின் பட பாட்டுகளும் ரொம்ப ஹிட் ஆவதற்கு அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹரிஸ் இருக்கின்றார். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அது வெற்றி கூட்டணி தான்.

தொடர் தோல்விகள் என துவண்டு போய் இருக்கும் விஜய் இப்போது எப்பிடியாவது வெற்றி படம் ஒன்றை கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றார். அது வெற்றி படமா அமைகின்றதா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வில்லு, குருவி என தோல்வி படங்களாக தந்த விஜய் இதில் சாதிப்பாரா? அவருடைய படங்கள் தோல்வி அடைய காரணம் என நான் நம்புவது அவரின் ஒரே நடிப்பும் , டான்சும், ஒரே கதயம்சங்களும் , ஒரே சண்டை, வெட்டு , குத்து , கும்மாளம் தான் வேற ஒன்றும் இருக்காது. ஒன்றில் ரஜினி ஸ்டைல் இருக்கும், அல்லது எம். ஜி.ஆர் போல ஸ்டைல் போல இருக்கும் . இதைதான் மாற்றுவார். தனக்கு என்று ஒரு பாணி கிடையாது .

ரசிகர்கள் இப்போது ஒரு நல்ல கதையம்சமும், நல்ல நடிப்பும் இருந்தால் எந்த நடிகருடைய படத்தையும் பார்க்கிறார்கள். அவர்கள் இப்போது கூடுதலாக நடிகர் யார் நடிக்கின்றார் என்று பார்ப்பதில்லை. நல்ல கதையை தான் எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் வெற்றி பெற்ற படம் நாடோடிகள் . ரசிகர்களின் ரசனை மாறிவருகிறது .

அதற்கு ஏற்றபடி நல்ல படங்கள் , தரமான படங்களை தான் எதிர்பார்க்கிறார்கள். விஜய் ரசிகர்களும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் விஜய் அப்பிடியான , ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்க முடியாமல் இருக்கின்றது . ஒரு கெட்டப் வித்தியாசமோ , வித்தியாசமான கதையம்சமோ இல்லை. ஒரே அலுத்துப்போன முகம் தான்.

ஏன் விஜயால் விக்ரம், கமல் , சூர்யா, அஜித் போல் நடிக்க முடியவில்லை. அவருடைய முகத்துக்கு ஒத்து வருகின்றது இல்லையா ? அல்லது அப்பிடி நடிக்க வராதா? வேட்டைக்காரன் பாட்டும் வெளி வந்து விட்டது . ஒரே அரைத்த மாபோல் தான் உள்ளது. ஒரே இரைச்சல் பாட்டுகளும் , புகழ் பாடும் வரிகளும் "நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்" இப்படி தான் பாடல்கள் வேற. இப்படி இருக்கின்றது இப்போது வரும் பாடல்கள் எல்லாம் .

நல்ல நண்பர்கள் விஜயும், சூர்யாவும். இருவரின் படங்களும் தீபாவளிக்கு வர இருக்கின்றன. நேருக்குநேர் ,பிரண்ட்ஸ் போன்ற திரைபடங்களில் இருவரும் சேர்ந்து நடித்தும் இருக்கின்றார்கள்.

பாப்போம் எந்த படம் வெற்றி பெறுகின்றது என்று ..................................