Friday, October 2, 2009

50 ஆவது பதிவை தொட்டு விட்டேன் .

ஒருவருடைய வழிகாட்டலோ , துணையோ இன்றி நான் ஐம்பதாவது பதிவை தொட்டு விட்டேன். எனக்கு மிகுந்த சந்தோசத்தை தருகிறது . முதலில் எழுத தயங்கினேன். பின்பு என்னை சுதாகரித்து கொண்டு எழுதிதான் பார்போம் என களத்தில் இறங்கி ஐம்பதாவது பதிவும் இட்டு விட்டேன்.

இன்னும் எழுத வேண்டும் பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆவலாய் உள்ளேன். எனினும் நான் இன்னும் அறிய வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. நான் எழுதும் ஆக்கங்களை திரட்டிகளில் எப்படி சேர்ப்பது . திரட்டிகள் என்னென்ன இருக்கின்றன . பாட்டுக்கள் எப்படி கேட்பது ? என்று பல தெரியாத விடயங்களும் இருக்கின்றன. எனக்கு உதவி செய்ய விரும்பும் உள்ளங்கள் எனக்கு அதை அறியத்தரவும் .

நான் ஆக்கங்களை எழுதி எனது தளத்தை ஆரம்பிக்கும் போது எனது தளத்தில் முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் சந்துரு அண்ணாவும் , ஹிஷாம் அண்ணாவும் தான்.இப்போது 25 பேர் என்னை தொடர்பவர்களாக இருக்கிறார்கள். நான் நினைக்கவே இல்லை . எனக்கு இந்தளவு பேர் என்னுடைய மெம்பெர்கள் ஆவார்கள் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நான் இன்னும் பல நல்ல ஆக்கங்களை எழுதி வெளியிடுவேன் . நல்ல நண்பர்கள் எனக்கு இன்னும் கிடைப்பார்கள் என நான் நினைக்கிறேன்.


சோதனைகளை சாதனைகள் ஆக்க வேண்டும் .
அப்போது தான் நாம் ஒவ்வொரு நாளும்
புதிதாக பிறந்தோம் என்ற உணர்வு நமக்குள் தோன்றும் .



No comments: