Friday, October 2, 2009

மழையோ மழை

மழை எப்போது வரும்? இல்ல வராது .இன்றைக்கு வராது. வெயில் அடிக்குது . மப்பாக இல்லை . அப்போ எப்பிடி மழை வரும் ? ஐயோ ஏன் சண்டை பிடிக்கிறீங்க என்று நான் எனது நண்பியிடம் கேட்டேன். அவள் சொன்னாள் மழையை நம்ப முடியாமல் இருக்குது அப்பா . அதுதான் பிரச்சனை என்று கூறினாள் ஏன் நண்பி . ம்ம்ம்ம்ம்ம் இதுதான் பிரச்சனையா ? சரி . எது எப்ப நடக்கும்?, எப்பிடி நடக்கும்? , என்னென்று நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது . அது போல தான்டி மழையும் என்று நான் கூறினேன் . ம்ம்ம் என்னுடைய நண்பி சொல்வதும் சரி தானே . மப்பாக வானம் கறுக்கவில்லை, வெயில் எறிக்குது. உடனே மழையும் வருகிறது. இந்த காலநிலை மாற்றம் இப்படி இருக்கிறது . மனிதன் காடுகளை அளித்து , மரங்களை வெட்டி எல்லா இயற்கை வனங்களையும் அழிக்கின்றான். இதனால் இயற்கையின் சமநிலை பேணப்படுவதில்லை . அத்துடன் இப்போது தான் அறிந்தேன் . இந்தோனேசியாவில் நிலநடுக்கம் என்று . தினம் தினம் மனித உயிர்கள் எப்படி எல்லாம் பறிக்கப்படுக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றது. ஒன்றில் சூறாவளி , நிலநடுக்கம், வாகன விபத்து என தினம் தினம் மனித உயிர்கள் பலியாகின்றன. மழை வந்தால் எவ்வளவு கஷ்டம் அப்பாடி . வாகனங்கள் ஓடுவது , வழியால் மக்கள் நடந்து செல்ல கஷ்டம் , குப்பைகள் எல்லாம் வீதியால் கரைந்து கொண்டு போகும் . தெருவில் செல்ல முடியாது . ஒரு துர் நாற்றம் வீசும் . ஆனால் மழையை நம்பி இருக்கும் விவசாயிகள் பாவம்தானே. நாம் எல்லாவற்றையும் எல்லவா யோசிக்க வேண்டும் .

No comments: