மனிதராய் பிறந்த நாம் எல்லோரும் சந்தோசமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் . இன்பம் வரும் போது சிரித்தும் துன்பம் வரும் போதும் கவலையுடனும் இருக்க கூடாது . அந்த கவலையை மறக்க நினைக்க வேண்டும் . எல்லோருடனும் சிரித்து, பேசி சந்தோசமாக வாழ வேண்டும். இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல . அவற்றை சரி சமமாக நோக்க வேண்டும் .
அதற்க்காக எப்பவும் சிரித்து கொண்டு இருக்க கூடாது . அப்பிடி சிரித்து கொண்டு இருந்தால் பைத்தியமா இதுக்கு என்று கேட்பார்கள் . மனிதனின் ஆயுள் காலம் வரை அவன் பல இன்ப துன்பங்களை சந்திக்கின்றான். அது போல் பல நோய் நொடிகளில் இருந்து தப்பிக்கின்றான் .
அந்த நோய் நொடிகள் கூடுதலாக வராமல் இருப்பதற்கு அவன் சிரித்து சந்தோசமாக இருக்க வேண்டுமாம். நாப்பது வயது வந்ததும் நோய் நொடிகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றன . மனதில் கவலைகள் , யோசனைகளை , போன்றனவும் ஏற்பட்டு விடுகிறது .
இவை பல நோய்களுக்கு காரண கர்த்தாவாக இருகின்றன. நீங்கள் கூடுதலாக யோசித்து நீங்களே நோய் வர விடக்கூடாது என்பதுதான் என் கருத்து . நல்ல ஜோக்ஸ் , சிரிப்பூட்டும் கதைகள், படங்கள், உங்களுக்கு பிடித்த பாட்டு , அவற்றை கேளுங்கள் . படியுங்கள் . உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்
தனிமையில் எப்போதும் இருக்காமல் மட்டையவர்களுடன் சந்தோசமாக கதைத்து மகிழுங்கள் . சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாட்டும் இப்பதான் எனக்கு ஜாபகம் வருகிறது . ம்ம்ம்ம்ம்ம் அதுவும் உண்மை தான் .
நீங்களும் சிரித்து மட்டயவர்களையும் சிரிக்க வையுங்கள் . அதில் ஒரு சந்தோசம் இருக்கும். அது எல்லாராலும் முடியாது.
ஒரு புன் சிரிப்பால்...................
ஒரு குழந்தையின் சந்தோசத்தை பாருங்கள் .
கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் கோபம் நீங்கும் .
சண்டை பிடித்தவர்கள் சந்தோசமடைவார்கள் .
மனதில் உள்ள கவலைகள் குறையும்.
4 comments:
ஹ.. ஹ.. ஹா... சூப்பரூ ...
அருமையா.....
super pavi.
nalla siriga
Post a Comment