Monday, October 19, 2009

பிறந்த நாள் அன்று ....


எல்லோரும் நம்முடைய தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருந்து இந்த உலகத்தை எட்டி பார்க்க உதயமாகின்றோம் . அப்போது தான் நாம் பிறந்தோம் . பிறந்த நாள் . எல்லோருக்கும் பிறந்த நாள் எப்போது என்று தெரியும் . இறக்கும் நாள் எப்போது என்று தெரியாது . இது எல்லோருக்கும் தெரியும் .

எல்லா பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் முதலாவது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள் . அதன் பின்பு சிலர் அடுத்து வரும் பிறந்த நாட்களையும் விமரிசையாக கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள் . 








ஆனால் ஒரு சிலர் முதலாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டு பிறகு இருபத்து ஓராவது பிறந்த நாள் அதாவது கீ பர்த்டே என்று சொல்வார்கள் அதை மட்டும் கொண்டாடி விட்டு அதற்கு அப்புறம் பிறந்த நாளை கொண்டாட மாட்டர்கள் .

இன்னும் ஒரு சிலர் தங்களுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாடுவார்கள் . எப்பிடி என்றால் தாங்கள் பிறந்த நாள் அன்று கோவில் போய் அர்ச்சனை செய்து கடவுளை வழிபடுவர்.






இது எல்லாம் சரி . எப்படி பலர் பல விதமாக கொண்டாடுகிறார்கள் . வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் . வாழ்த்துக்களை எல்லா வயது நபர்களும் சொல்லலாம். எந்த வயசு என்றாலும் வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளலாம் .

அதெல்லாம் சரி . நடக்கட்டும் . இனிமேல் நீங்கள் பல நல்ல காரியங்களை செய்ய பாருங்கள் . அதாவது ஏழை மக்களுக்கு உங்களுடைய பிறந்த நாள் அன்று உதவி செயுங்கள் 




அநாதை இல்லங்கள் , சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் , முதியோர் இல்லங்கள் , போன்ற இடங்களுக்கு சென்று உங்கள் பிறந்த நாள் அன்று அவர்களுக்கு ஒரு வேளை உணவு பாசல்கள்,  பானங்களை கொண்டு போய் கொடுக்கலாம். துணிகள் , உடுப்புகளை வாங்கி கொடுக்கலாம். அவர்களுடன் சென்று ஆறுதலாக உரையாடலாம். அதாவது உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செயுங்கள் உங்கள் பிறந்த நாள் அன்று. அவர்கள் எவ்வளவு சந்தோசபடுவார்கள் தெர்யுமா ? அவர்களின் சந்தோசத்தை அவர்களின் முகத்தை பார்த்தே நீங்கள் கண்டு பிடிக்கலாம் .




உங்களுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும் . மனம் ஆறுதல் படும். நீங்களும் அன்று சந்தோசமாக இருப்பீர்கள் . அவர்களின் வாழ்த்துக்கள் உங்களை மென் மேலும் பல வெற்றிகளை , உந்து சக்தியை தரும் .


இப்படி எல்லோரும் செய்து பாருங்கள் . உங்கள் பிறந்த நாட்களை இப்படி கொண்டாடுங்கள் . நல்ல பலகாரியங்களை செய்திடுங்கள் . இதில் வசதி படைத்தவர்கள், வசதி படைகாதோர் என்றில்லாமல் அவர் அவர் அவர்களின் தகுதிக்கு ஏத்தபடி உதவி செயுங்கள் .


இருக்கிறவர்களுக்கு உதவி செய்வதை விட ஒன்றும் இல்லாமல் இருப்போருக்கு உதவி செயுங்கள் . அதனால் தான் சிறந்த பயனை பெறலாம் .

2 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான - அர்த்தமுள்ள பதிவு! பிறந்த நாளுக்கு மாத்திரமல்ல குடும்பத்தில் எல்லா முக்கியமான தினங்களுக்கும் ஏன் வசதி கிடைக்கும்போது(முடிந்தால் தினமும்) அப்படிச் செய்வது சிறப்புத்தான். நான் அதை அனுபவத்தில் கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். எங்களுக்கும் அவர்கள் மீது அன்பு ஏற்படுவதுபோல அவர்களுக்கும் எம்மீது அன்பு வரும் - இதில் ஒரு தனியான சுகமிருக்கும். ஏனென்றால் வாழ்க்கையே அன்புதானே!

Pavi said...

ஆம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையும் , யதார்த்தமும் கூட