ஒரு நல்ல , சிறந்த நடிகர் மாதவன் . நீண்ட நாட்களாக அவரின் படங்களை பார்க்க முடியவில்லை . அவர் ஏதாவது புதிய படங்களில் நடிப்பது பற்றி ஒரு தகவலையும் காணவில்லை . எங்கே மாதவன் ?. பட வாய்ப்புகள் குறைந்து விட்டுதோ தெரியவில்லை .
டான்ஸ் பல ஸ்டேப் எடுத்து நடிக்க மாதவனுக்கு வராது தான் . அது மாதவனே ஒத்துக்கொண்ட விடயம் . ஆனால் நடிப்பில் பிரமாதம் . நன்றாக நடிப்பார். உலக நாயகன் கமலுடன் அன்பே சிவம் என்ற படத்தில் கமலுக்கு இணையாக நடித்தவரல்லவா ? இந்த மாதவன் . அவரின் சிரிப்பால் எவ்வளவு பேரை கவர்ந்து இருக்கிறார் .
அலைபாயுதே படம் தான் மாதவன் நடித்த முதல் படம். ஆனால் அவரை அந்த படத்தில் பார்த்தால் புதுமுகம் என்று சொல்லவே முடியாது. பல படங்களில் நடித்தவர் போல இருந்தது அவரின் நடிப்பும் , அனுபவமும் . நன்றாக நடித்திருந்தார் அந்த படத்தில் . பின்பு வந்த படங்களில் நான் குறிப்பிடும் படியாக எதிரி , என்னவளே, ரன் , பிரியமான தோழி , கடைசியாக வெளி வந்த யாவரும் நலம் என்ற படங்கள் எனக்கு பிடித்து இருந்தன.
ரன் படத்தில் நல்ல பவர் புள் நடிகராக இருந்தார். நல்ல விறுவிறுப்பான காட்ச்சிகளும் , கதையம்சமும் , நல்ல பாடல்களும் என ரன் ஒரு கலக்கலான காதல படம் . பல அதிகமான ரசிகைகளை கொண்டவர் மாதவன் .
பிரியமான தோழி படத்தில் ஒரு நல்ல நட்பின் மகிமையை உணர்த்திய படம் . பின்பு கடைசியாக வந்த யாவரும் நலம் ஒரு நல்ல படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .
ம்ம்ம் சொல்ல மறந்து விட்டேன் . மின்னலே , தம்பி படங்களை . அவை எல்லாம் மாதவனின் வெற்றி படங்கள் அல்லவா.
இன்னும் பல நல்ல படங்களில் மாதவன் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையும், ரசிகர்களின் அவாவும் கூட ......
ம்ம்ம் சொல்ல மறந்து விட்டேன் . மின்னலே , தம்பி படங்களை . அவை எல்லாம் மாதவனின் வெற்றி படங்கள் அல்லவா.
இன்னும் பல நல்ல படங்களில் மாதவன் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையும், ரசிகர்களின் அவாவும் கூட ......
6 comments:
பவி முதல் விடயம் உங்களுக்கு மாதவன் பித்து பிடித்து விட்டது என்பது பதிவின் பல இடங்களில் காண முடிந்தது.. இருப்பினும் மாதவனின் நளதமயந்தியை எப்படி மறந்தாய் பெண்ணே....-? நான் மாதவனை அதிகம் ரசித்த படம் அன்பே சிவம்...இந்தி படம் ரங்குதே பசந்தியில் கூட நல்லா நடிச்சு இருப்பார்...
ஜொள்ளு??
pavi pathivu arumai
enakkum mathavanin alaipayuthey film pidikkum pavi
பவி . நள தமயந்தி நல்ல படம் பவி. நீங்கள் பார்க்கவில்லையா ?
நல்லா இருக்கு . உங்க பதிவு
எல்லோருக்கும் நன்றி .
எனக்கு பித்து பிடிக்கவில்லை . சும்மா எழுதினேன் . அவ்வளவு தான் .
நள தமயந்தி படம் பார்த்தேன் . பதிவில் இடுவதற்கு மறந்துவிட்டேன் .
Post a Comment