சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு .
எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள் . தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம் .
பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம் . நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும் . சாப்பிட ஆக்கள் இல்லை . ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.
ஆப்பிள் , அன்னாசி , பலா, வாழை என பழங்கள் உண்டு . உங்கள் உடல் நலத்துக்கு சிறந்தது எதுவோ அவற்றை வாங்கி உண்ணுங்கள் . எதுவும் அளவோடு இருக்கட்டும் . அதற்காக வாழை பழம் கூட இருக்கிறது தானே என்று நான்கு , ஐந்து என்று சாப்பிட்டு விட்டு பின்பு எனக்கு சர்க்கரை வியாதி கூடி விட்டுது டாக்டர் என்று வைத்தியசாலையில் நிக்கும் அளவுக்கு இருக்க கூடாது .
என்ன பழம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் .கடையில் விற்கும் பானங்களை குடிப்பதை விட வீட்டில் நாமே நல்ல சுத்தமாக ஜூஸ் போல் பழங்களை அடித்து குடிக்கலாம் . தாகமும் தீரும் . உடம்புக்கும் நல்லது . மாம்பழ ஜூஸ் , விளாம் பழ ஜூஸ் , அன்னாசி ஜூஸ் என நாமே பழங்களை கடையில் வாங்கி வீட்டில் செய்து சாப்பிடலாம் .
ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு ருசி இருக்கும் . ஒன்று புளிப்பு தன்மை கொண்டதாகவும் , இனிப்பாகவும் இருக்கும் .காய்ச்சல் இருக்கும் போது பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச்சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். இதனால் ஆப்பிள் , ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்
.
சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது .அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் விட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா விற்றமினும் உண்டு . மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.
சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது .அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் விட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா விற்றமினும் உண்டு . மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.
உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி சாப்பிடுங்கள். வயிறு பாதி நிரம்பிவிடும். பின்னர் மற்றஉணவைக் குறைவாக உட்கொண்டால் கூட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஆப்பிள், வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியில் கலோரிகள் மிக மிகக் குறைவு என்பதை கருத்தில் கொள்ளவும் .இதெல்லாம் நாம் படித்து வைத்து இருந்தும் நாம் எப்பதான் இப்படி எல்லாம் செய்கிறோம் எனவும் யோசிக்க தோன்றுகிறது . எப்ப கையில் என்ன அகப்படுகிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் . நேரம் , காலம் பார்ப்பதில்லை . பழகின பழக்கம் அப்படியே .
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
7 comments:
தனம் ஒரு ஆப்பிள்.........
மன்னிக்கவும் தனம் அல்ல தினம்
nalla suvaiyaana pathivu pavi.
super.
padankalum arumai .
thodaraddum ..................
ippadiyaana pathivukalai unkalidam irunthu innum ethir parkiroom.
நான் பழம் கள் என வாசித்துவிட்டேன். நல்ல பதிவு Alignment justify பண்ணினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.
//நான் பழம் கள் என வாசித்துவிட்டே//
:) :)
பழம் கள் என வாசித்து விட்டீர்களா ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் . அது நான் விட்ட பிழை இல்லை .
Post a Comment