Monday, November 23, 2009

எனக்கு பிடித்த வரிகள் - பழைய பாடல்களில் இருந்து -3

அந்த காலத்தில் வந்த பாடல்கள் எல்லாம்  நல்ல பாடல்கள் , நல்ல வரிகள் , எல்லோருக்கும் புரியும் படியும் , விளங்கும் படியும் பாடல்கள் இருக்கும் .


அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை


கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தில் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்ததெடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி


வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு


சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....



எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதி பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதெ மதிமயங்காதே
கலங்காதெ, மதிமயங்காதே

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்


குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்



நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அனைத்த கைகள்
கேட்க நிநைத்தாள் மறந்தாள்
கெள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா


பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா


ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல


காதலித்தல் பாவமென்றால் கண்களும் பாவமன்றோ?
கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ?
பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்


குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக




























7 comments:

V.N.Thangamani said...

அருமையான ரசனை பவித்ரா
நல்லமனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

Anonymous said...

pavi palaya paadalkalai ippadi neenkal tharumpoothu nalla irukku.
nalla varikal .
thodaraddum.............


A.T.M.

Anonymous said...

சூப்பர் பவி. அசத்துங்க .................

என்றும் அன்புடன்
அன்பு

Pavi said...

நன்றி தங்கமணி சார்.
நன்றி அன்பு, A.T.M.

தேவன்மாயம் said...

ஆகா!!

மிக அருமையா எழுதியிருக்கீங்க!!

Anonymous said...

Really superb.keep it up.

Pavi said...

நன்றி தேவன்மாயம்