Tuesday, January 5, 2010

இன்றைய போட்டியில் வெல்லுமா இலங்கை அணி


நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை 7 விக்கட்டுகளால் வென்ற இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்தியாவையும் வெல்லுமா ? என்பதுதான் எல்லோருக்கும் எழும் கேள்வி . நல்ல போமில் உள்ள இந்திய அணி இலங்கை அணியை எளிதாக வெற்றி கொள்ளுமா ?


கடந்த ஆண்டு இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்  அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்திய அணி வென்றது. கடைசியாக நடந்த, இரு அணிகள் பங்கேற்ற 7 ஒரு நாள் தொடர்களில் 6ல் கிண்ணத்தை  வென்றுள்ளது. சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என வென்று, அபார வெற்றி பெற்றது . முத்தரப்பு தொடரில் மீண்டும் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன. 


இந்திய அணியின் நம்பிக்கை நச்சத்திரங்கள் சேவாக் , கம்பீர் , தோனி என நீண்டு கொண்டு போகிறது ஓட்ட எண்ணிக்கையை மலை போல் அதிகரிக்க .  இலங்கை அணியிலும் நச்சத்திரங்கள் இருக்கின்றன . சங்ககாரா , தரங்க , டில்ஷான் , கப்புகெதர , சமரவீர என துடுப்பாட்ட வரிசை உள்ளது .
இந்திய அணிக்கு இன்னும் ஒரு அதிஸ்டம் காத்து இருக்கிறது .இந்திய அணி டெஸ்டில் "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்றால் ஒரு நாள் அரங்கிலும் முதலிடம் பெற வாய்ப்பு உள்ளது. தவிர, அடுத்து நடக்க உள்ள ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்தினால், இந்திய அணி "நம்பர்-1' இடம் பெறலாம். தற்போது ஆஸ்திரேலியா 130, இந்தியா 123 புள்ளிகள் பெற்றுள்ளது. 

.சமீபகாலமாக பீல்டிங்கில் இந்திய அணி சொதப்பி வருகிறது. எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை கூட மோசமாக தவறவிடுகின்றனர். இதுகுறித்து கேப்டன் தோனி கூறுகையில்,"" இலங்கைக்கு எதிரான கடந்த தொடரில் சில "கேட்ச்'களை கோட்டை விட்டது உண்மைதான். இதை சரிசெய்ய முயற்சிக்கிறோம். சிறந்த பீல்டர்கள் இருந்தால் அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். முக்கியமாக "மிடில் ஓவர்களில்' ரன்களை கட்டுப்படுத்த பீல்டிங் உதவும். கடைசி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசுவதில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதை தொடருவோம் என நம்பிக்கை உள்ளது,'' என்றார்.




இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 118 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 63, இலங்கை 44 வெற்றியை பெற்றன. 11 போட்டிக்கு முடிவு இல்லை. பங்களாதேசில் இந்திய அணி 27 ஒருநாள் போட்டியில் விளையாடி 18 வெற்றி, 8 தோல்வியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதன்மூலம் பங்களாதேஷ்  மண்ணில் அதிக வெற்றிகள் குவித்த அணிகள் வரிசையில் முதலிடம் வகிக்கிறது. இலங்கை அணி 17 போட்டியில் பங்கேற்று 11 வெற்றி, 6 தோல்வியை பெற்றுள்ளது.


பொறுத்திருந்து பார்போம் இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்று .........


4 comments:

அண்ணாமலையான் said...

ரொம்ப பிஸியோ?

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விமர்ச்சனம்....

என்னைப்பொறுத்தவரை இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்....

புலவன் புலிகேசி said...

தற்போதைய நிலைப்படி இந்தியா காலி...

Pavi said...

பல அனுபவமற்ற வீரர்களை களத்தில் இறக்கி வெற்றி பெற்று இருக்கிறது இலங்கை அணி. மஹேல, டில்ஷான், சனத் , முரளி என பல முன்னணி வீரர்கள் இல்லாது இலங்கை அணி நேற்று இந்தியாவை எதிர்கொண்டது . பந்து வீச்சாளர்களின் பங்களிப்பும் இவ் வெற்றிக்கு காரணம். இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள் ..