Wednesday, January 13, 2010

கோப்பையை வெல்லுமா இலங்கை அணி

Nuwan Kulasekara accounted for three of India's top-order batsmen to give Sri Lanka the early advantage in Mirpur
இன்றைய போட்டியில் இலங்கை அணியும் இந்திய அணியும் களம் இறங்கவுள்ளது . இந்தியாவை பொறுத்தவரை மிகவும் வலுவான துடுப்பாட்ட வரிசையை கொண்டது . எனினும் பந்துவீச்சு பலவீனம் . ஆனால் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தால் வெற்றி பெற முடியும் . ஏனெனில் பந்துவீச்சில் பலமான அணியாக இருக்கிறது இந்திய அணியை விட .

Virat Kohli makes the long walk backகோஹ்லி, சச்சின் இல்லாத குறையை சரியாக நிவர்த்தி செய்து வருகிறார். அவரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது . இந்த முத்தரப்பு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் முதல் இடத்தில் காணப்படுகின்றார் . 
 
Amit Mishra is congratulated for dismissing Suraj Randiv, India v Sri Lanka, Tri-series, 5th ODI, Mirpur, January 10, 2010

இக்கட்டான நேரத்தில் அணியை சரிவிலிருந்து மீட்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்  கேப்டன் தோனி இன்றைய போட்டியில் நிலைத்து நிற்பாரா ?. ரெய்னாவின் ஆட்டமும் இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும் வாய்ப்பும் உள்ளது
  
MS Dhoni and Suresh Raina run hard between the wickets 
கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒரு நாள் தொடரை இழந்த இலங்கை அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. தொடக்க வீரர்களான தரங்க , டில்ஷான் ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு . அதன் பின்பு சங்ககாரவும் , ஜெயவர்த்தனா கை கொடுத்து உதவுவர் .ஜெயவர்தனா, சமரவீரா இத்தொடரில் அசத்தி வருகின்றனர். தவிர, கண்டம்பி,  பெரேராவின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பும் உண்டு .
Kumar Sangakkara and Tillakaratne Dilshan run hard
 


 
 இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் இலக்கை "சேஸ்' செய்யும் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆடுகளமும் இரண்டாவது துடுப்பெடுத்து ஆடும்  அணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இன்றைய இறுதி போட்டியில்  நாணய சுழற்ச்சியில் வெல்வது  மிகவும் முக்கியம். ஒருவேளை இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடினால்   300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டும் . அல்லது இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடினாலும்300 ஓட்டங்களுக்கு மேல் பெற வேண்டும் . 

Kumar Sangakkara was forced to lead his players off 
சங்ககாரா இதுவரை தலைமை பொறுப்பு ஏற்று ஒரு வெற்றி கோப்பை கூட வென்று கொடுத்ததில்லை . அந்த குறையை இந்த தொடரில் தீர்ப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

5 comments:

KANA VARO said...

ada... koncham wait panni match mudiya podunkalen..

அண்ணாமலையான் said...

இப்போ மது கோப்பைய வென்றுடிச்சி நம்ம டீம். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

இலங்கைக்கே கோப்பை., இது இளையவீரர்களின் வெற்றி...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...

Pavi said...

இலங்கை அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றி கொண்டது . இது இளைய வீரர்களின் வெற்றியும் அனுபவ வீரர்களின் பலமும் தான் . இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள் . தொடரட்டும் இந்த வெற்றி நடை .

ஞானப்பழம் said...

இப்போ மது கோப்பைய வென்றுடிச்சி நம்ம டீம். ///

விடுங்க பாஸ்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...