Wednesday, March 3, 2010

வேஷம் கலைந்தது

சாமி சாமி என்று
ஊரை ஏமாற்றி
எத்தினை பேரை
ஐயா நீ ஏமாற்றினாய் ?
உன் வேஷம்
இப்போது கலைந்ததையா ?

எத்தினை பேரை
சந்தித்திருப்பாய் ,
எத்தினை பேரை
ஆசீர்வாதம் எனும்
பேரில் ஆசீர்வதித்து
இருந்திருப்பாய் ?
உன் கள்ள லீலைகள்
இப்போதுதானே எம்
மக்களுக்கு புலப்பட்டது

இது எத்தனை நாளாய்
நடக்குதையா ?
உன் கள்ள திருட்டு
லீலைகள் சாமி
இனியாவது திருந்துங்கள்
மக்களே ? போலி
சாமிகளை நம்பாதீர்கள்

கோவில்களுக்கு சென்று
கோவிலில் உள்ள விக்கிரகங்களை
வணங்குங்கள் - இப்படியான
கள்ள சாமிகள் பலர்
எம் முன்னால் உலாவி
திரிகிறார்கள் - எம்
கண்களுக்குள் மண்ணை
தூவி விட்டு

அவர்களும் ஒருநாள்
பிடிபடாமலா இருக்க
போகிறார்கள் - ஏமாறுபவர்கள்
இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்
இருக்கத்தான் செய்வார்கள்
இனி நாம் தான்
திருந்தி நடக்க வேண்டும் ............

10 comments:

தோழி said...

:(

sathishsangkavi.blogspot.com said...

பவி நல்லாச் சொன்னீங்க...

கூடவே தாயையும், தந்தையும் வணங்கிணாலே போதும் என்று சேர்த்துக்குங்க....

நித்தி said...
This comment has been removed by the author.
Anonymous said...

kovilkalukku poi kumbudunka.
intha asamikalai nambaatheenka........

Anonymous said...

mmmmmmmm neenka solvathu thaan sari pavi.

anpudan
anbu

akila said...

இவர்கள் எல்லாம் பசுத்தோல் போர்த்திய புலிகள்
இனியும் ஏமாறாமல் இருங்கள் மக்களே

Pavi said...

நன்றி சங்கவி .
நீங்க சொல்வது சரிதான் .

Pavi said...

நன்றி அன்பு

Pavi said...

நன்றி அகிலா.
ம்ம்ம்மம்மம்ம்ம்ம் நாம் தான் திருந்த வேண்டும் .

மதுவர்மன் said...

//இனியாவது திருந்துங்கள்
மக்களே ? போலி
சாமிகளை நம்பாதீர்கள் //

சாமிகள் எல்லோருமே போலிகள் தான். நல்ல சாமிகள் என்று நீங்கள் கருதுவது, அவர்களின் போலித்தனங்கள் அம்பலமாகாதவரை.

//கோவில்களுக்கு சென்று
கோவிலில் உள்ள விக்கிரகங்களை
வணங்குங்கள் - இப்படியான
கள்ள சாமிகள் பலர்
எம் முன்னால் உலாவி
திரிகிறார்கள் - எம்
கண்களுக்குள் மண்ணை
தூவி விட்டு //

விக்கிரகங்களை வணங்குங்கள், விக்கிரகங்களுக்கும், உங்களுக்கும் இடயில் நிற்கும் பூசாரிகளுக்கு கூட இடம் கொடுக்காதீர்கள். அங்கே தான் ஆரம்பிக்கின்றது போலி. பூஜைத்தட்டில், அர்ச்சனை என்ற பெயரில் பணம் பறிப்பதிலிருந்து.