Tuesday, March 9, 2010

கலக்கும் சந்தானம்

http://1.bp.blogspot.com/_AsK9p9DCVWw/SnxTnY4ZkGI/AAAAAAAAKM0/M0h-5DbkQnA/s400/santhanam-ap7-2008.jpg 

தனக்கென்று ஒரு தனி இடத்தை எட்டி இருக்கிறார் சந்தானம் . இரட்டை அர்த்த புகழ் சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றார் . வடிவேலு , விவேக் , கருணாசுக்கு அப்புறம் சந்தானமும் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் .


டி.வி.யில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம் காமெடியில் தனக்கென்று ஒரு நிலையை எட்டியிருக்கிறார். விவேக் இப்போது கொஞ்சம் ஓய்ந்திருக்கும் நிலையில் சந்தானம் காட்டில் நல்ல மழைதான்.

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/santanam_with_simbu.jpg 
இத்தனை நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை லட்சம் கொடுத்தால் வருவேன் என்று டிமாண்டு வைத்துப் பேசும் நடிகராக உயர்ந்துள்ளார் சந்தானம் என்றால் பாருங்களேன் அவரின் வளர்ச்சியை . வைகைப்புயல் வடிவேலு இருக்கும் போதே இவருக்கு இவ்வளவு மவுசு . 

இயக்குனர் சொல்லும் காமெடி காட்சிகளில் தனக்கும் தோன்றுவதை சொல்லி அனுமதி கேட்டுவிட்டு காட்சிகளை மெருகேற்றுவார். தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது சந்தானத்துக்கு .

http://2.bp.blogspot.com/_5Q21inr_T7c/SuLrg_j-oyI/AAAAAAAAHOE/mhsiFEr54rc/s400/Santhanam01.jpg   
எனக்கு சந்தானத்தை பிடித்தது கண்டேன் காதலை படத்தில் தான் . சும்மா அசத்தி இருந்தார் காமெடியில் . தற்போது தனக்கென ஒரு நடிகர்கள் குழுவை உருவாக்கிக் கொண்டு தான் நடிக்கும் படங்களில் வரும் காமெடி காட்சிகளை தானே தயார் செய்து அதற்கென தனியாக சம்பளமும் பெற்றுக் கொள்கிறார். 

முன்னணி காமெடியன்கள் பட்டியலில் பரபரக்க சேர்ந்திருக்கிறார் சந்தானம். ரஜினியின் எந்திரன் உட்பட பல முன்னணி ஹீரோ  நடிக்கும் படங்களிலும்  நடித்துவருகிறார்.

http://kollyworld.com/images/stories/news/102009-1/Actor_Santhanam.jpg  கண்டேன் காதலில் படம் சந்தானத்துக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் . எல்லோருக்கும் அதில் சந்தானத்தை பிடித்தும் இருந்தது . முழு படத்திலும் வந்து போகிறார் . ஹீரோவுக்கு நிகராக . தமன்னாவின் தாய்மாமனாக நடித்து இருக்கிறார் . மைனர் என சொல்லிக்கொண்டு ஊரில் சிலர் திரிவார்கள். வேலை வெட்டி இல்லாமல் அலட்டிக்கொண்டாலும் அவர்களுக்கென தனி மரியாதையும் இருக்கும். அத்தகைய வேடம் சந்தானத்துக்கு . அந்த வேடத்தில் மிகவும் பொருந்துகிறார் . அசத்தலாக நடித்தும் இருந்தார் .

http://i37.tinypic.com/1zeuloh.jpg 
தீராத விளையாட்டு பிள்ளை, கந்தகோட்டை போன்ற படங்களில் விஷால், நகுலுடனும் நடித்து இருந்தார் . அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்திருந்தார் . இப்போது ரஜினியுடன் எந்திரன் படத்திலும்  சிக்குபுக்கு, சிங்கம் புலி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் .  

குரு சிஷ்யன்' படத்தில் வடிவேலு இடத்தில் நடிக்க  இருக்கிறார் சந்தானம் .சக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் சுந்தர் சி. மற்றும் சத்யராஜ் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். காமெடியை மையமாக கொண்ட இந்த படத்தில் வடிவேலு நடிப்பதாக  இருந்தது. ஆனால் அவர் விலகி கொண்டு விட்டார்.இந்நிலையில்  அவரது இடத்தில் சந்தானத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.  சந்தானத்துக்காகவென்று கொஞ்சம் கதையையும், காட்சிகளையும் கூட மாற்றியிருக்கின்றனராம். பார்ப்போம் . 

http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-1/images-1/santhanam.jpg 
வடிவேலு, விவேக் இருவருக்கும் மாற்று என்ற அந்தஸ்தை சில படங்களிலேயே எட்டி பிடித்திருக்கிறார் இவர். இன்றைய தேதியில் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேர் காம்பினேஷனிலும் கலக்கி வருபவர் சந்தானம் மட்டும்தான்.

காமெடியில் இன்னும் கலக்கட்டும் சந்தானம் .
  

2 comments:

அகல்விளக்கு said...

இன்னாது
கலக்கும் சந்தானமா
நான் என்ன சாம்பாரா கலக்கிட்டு இருக்கேன்...

நொள்ள பேச்சு பேசுறதுக்கு கூட நான்தான் கிடைச்சனா....

Pavi said...

காமெடியில் கலக்குகிறார் . அதை தான் சொல்ல வந்தேன் .
காமெடியில் நடிக்கும் சந்தானத்தை சொன்னால் உங்களுக்கு என்ன ?
நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் .