Sunday, April 25, 2010

வெற்றி யாருக்கு ???

http://4.bp.blogspot.com/_jB8fXOs8gSE/SCMwXmwQh3I/AAAAAAAACR4/BhUiDxfyN-c/s400/Dhoni-Chennai-SuperKings.jpghttp://indiain2010.info/blog/wp-content/uploads/2010/03/sachin.jpg
இன்று நடக்கும் இறுதி போட்டியில் வென்று கிண்ணத்தை வெல்ல போகும் அணி எது ? இது தான் இன்று எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வி . சச்சினின் அணியா ?, தோனியின் அணியா ? கிண்ணத்தை கைப்பற்ற போகின்றது என்று தெரியவில்லை .
http://www.premierleaguenews.in/wp-content/uploads/2009/05/ipl_2009_winner_trophy.jpg
ஆரம்பம் தொட்டு இரு அணிகளும் பலமான அணியாக  திகழ்கின்றன . பந்து வீச்சிலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி , களத்தடுப்பிலும் சரி . ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று . இன்றைய போட்டியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம் .
http://indiain2010.info/blog/wp-content/uploads/2010/03/ipl3.jpg
முதல் சுற்றில் இரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மும்பை இண்டியன்ஸ் 10 வெற்றி, 4 தோல்விகளுடன் 20 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. சென்னை அணி 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் கண்டு 14 புள்ளிகளைப் பெற்றது.அரையிறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 35 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணி 38 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் டெக்கானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
http://sandeepkumar84.files.wordpress.com/2009/12/mumbai-indians-ipl121.jpg
மும்பை அணியின் . சாகிர் , மலிங்கா, பெர்னாண்டோ வேகப் பந்து வீச்சில், சென்னை அணி தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். சூப்பர் பார்மில் உள்ள சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன், விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கிறார்.
http://static.cricinfo.com/db/PICTURES/CMS/102500/102574.jpg
 வலது கைவிரலில் காயமடைந்த சச்சின், இன்றைய பைனல் போட்டியில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ராபின் சிங் கூறுகையில்,"" பைனலில் களமிறங்க சச்சின் விருப்பமாக உள்ளார். ஆனால் காயம் காரணமாக அவரை வற்புறுத்த முடியாது. இன்று விளையாடுவதும், விளையாடாமல் இருப்பதும் அவரது சொந்த் விருப்பம்,'' என்றார். ஒருவேளை சச்சின் இடம் பெறாவிட்டால், அது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். சச்சினுக்குப் பதில், சாகிர் தலைமை பொறுப்பு ஏற்கலாம்.
http://static.cricketnext.com/pix/slideshow/05-2009/mumbai-indians-vs/chennaicelebrate_big.jpg
சென்னை அணியின் பந்து வீச்சில் போலிஞ்சர், மார்கல் வேகத்தில் மிரட்டுகின்றனர். ஜகாதி, அஷ்வின், முரளிதரன் ஆகியோரின் சுழலில் மும்பை அணி தடுமாறுவது உறுதி.  முரளி விஜய், ரெய்னா, பத்ரிநாத், தோனி என்ற அற்புதமான பேட்டிங் வரிசை இருப்பது சென்னைக்கு ஆறுதல் .
http://photos.cricket.com/processed/30/b5abfa96444136d04d10d0200c6ea10c/wm.jpeg
மும்பை அணியில் அதிக ஓட்டங்கள்  எடுத்த டெண்டுல்கர், அதிரடி வீரர் திவாரி, ராயுடு, பொல்லார்டு என முன்வரிசையிலும், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் என பின்வரிசையிலும் துடுப்பாட்டம்  இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
http://www.hinduonnet.com/tss/tss3123/images/20080607501800901.jpg
2008 ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரின் இறுதி போட்டியில்  ராஜஸ்தானிடம் வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணி, இந்த முறை கிண்ணத்தை  வெல்ல கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. இன்று சென்னை அணி கடுமையாக போராட வேண்டும் . வெற்றி பெற வேண்டும் . கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் . இது தான் சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பும் , நம்பிக்கையும் .

எனது  வாக்கு சென்னை அணிக்குத்தான் ? உங்கள் வாக்கு






6 comments:

ஸ்ரீ.... said...

பவி,

நல்ல அலசல். எனது ஓட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு. (சச்சின் வெல்ல வேண்டும்).

ஸ்ரீ....

Ramesh said...

நான் மும்பைத் தமிழன்!!!
தகுதி அதிகம் உள்ளவருக்குக் கோப்பை.!!!

S Maharajan said...

சென்னை வெற்றி பெற என் பிராத்தனை

Pavi said...

நன்றி ஸ்ரீ
வெற்றி சென்னைக்கு

Pavi said...

தகுதி சென்னை அணிக்குத்தான் .
நன்றி ரமேஷ்

Pavi said...

உங்கள் பிரார்த்தனை நிறைவேறியது .
நன்றி மகாராஜன்