இன்று தம்புள்ள மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜிம்பாவே தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் தலைவர் சங்ககரா, ஜெயவர்தனா, முரளிதரன், லசித் மலிங்கா உள்ளிட்ட அனுப வீரர்கள் அணிக்கு திரும்புவது பலம். ஜிம்பாப்வே தொடரில் கிண்ணம் வென்று சாதித்த டில்ஷான் , மாத்யூஸ், குலசேகரா, உபுல் தரங்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளது, இலங்கை அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறலாம்,
பாகிஸ்தான் அணியில் சோயப் அக்தர், சோயப் மாலிக் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். கப்டன் அப்ரிடி, சல்மான் பட், "ஆல்-ரவுண்டர்' அப்துல் ரசாக், கம்ரான், உமர் அக்மல் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற முடியும் வேகத்தில் முகமது ஆசிப், முகமது ஆமர் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் அரங்கில் அதிக முறை கிண்ணம் வென்ற அணிகள் வரிசையில், இந்தியா (1984, 88, 90-91, 95) மற்றும் இலங்கை (1986, 97, 2004, 08) அணிகள் உள்ளன. இவ்விரு அணிகள் தலா நான்கு முறை கிண்ணம் வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஒரு முறை (2000) கிண்ணம் வென்றுள்ளது. இம்முறை எந்த அணி வெல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .
7 comments:
"ஆசிய கிண்ணம் யாருக்கு ???"//
இதுகூடவா தெரியாது வெற்றியாளருக்குதான்.
இந்த முறை பாகிஸ்தான் கடுமையா போராடும்.... ஏன்னா அங்க அரசியல் அப்படி.
போட்டி கடுமையா இருக்கும்... இந்தியா ஜெயிக்கலன்னா கொடுமையா இருக்கும்.
தடம்பதித்தவைக்கு
http://www.bloggertricks.com/2009/05/recent-posts-with-thumbnails-widget-for.html
இந்த முறைஆசிய கிண்ணம் இந்தியாக்கு.
எங்களுக்கும் தெரியும் தானே
ஜொள்ளு......................
நன்றி கருணாகரசு
பொறுத்திருந்து பார்ப்போம் விஜய்
நன்றி உங்கள் வருகைக்கு
Post a Comment