Sunday, June 20, 2010

அகதி வாழ்க்கையின் கொடூரம்

http://lh5.ggpht.com/_zIxut7WcrTI/SeBDBGo8VtI/AAAAAAAADa0/PCvgo1jbLWU/refugeeWanni%202.jpg
வாழ இடத்தை இழந்து , மண்ணை இழந்து , வீடுவாசல்களை இழந்து , உடைகளை இழந்து , சொந்தங்களை இழந்து , பெற்றோரை இழந்து வாழ்கிறார்களே அது என்ன வாழ்க்கை . வாழ்வின் கொடூரம் அதுதான் . வாழ்வில் எல்லோருக்கும் இந்த தலைவிதி அமைய கூடாது .
http://jeyan4.files.wordpress.com/2009/08/idpvavuniyajune20092.jpg
ஒரு வேளை சோற்றுக்கு அண்ணாந்து பார்த்து கொண்டு இருக்க வேண்டும் . எப்போது எல்லோருக்கும் உணவு கிடைக்கும் என்று . குடிப்பதற்க்கு கூட தண்ணீர் தேடி திரிய வேண்டும் . கையில் பணம் இல்லை . சொந்த உழைப்பு இல்லை . என்ன செய்வது .
http://tamilarangam.files.wordpress.com/2009/05/boat_people_family.gif
ஒரு கூடாரத்துக்குள்  எத்தனை நாட்கள் தான் தங்கி இருப்பது . மலை வந்தால் வெள்ளம் உள்ளே வருகின்றது . மேலாலே ஒழுகுகிறது மழைநீர் . எத்தனை நாட்கள் தான் பரிதவிப்பது . எல்லா நாடுகளிலும் அகதிகளின் நிலை இதுதான் . அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இதெல்லாம் சர்வ சாதாரணம் .
http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SiZGRVcgI3I/AAAAAAAACu0/XU2CgTGMviM/s400/SRI_LANKA_(F)_-_Refugee_(500_x_375).jpg
இந்த நிலைமை மாற வேண்டும் . செல்வந்தர்கள் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் . தொண்டு நிறுவனங்களில் காசை கொடுத்து தேவையான உதவிகளை செய்யுங்கள் . அல்லது தொண்டு நிறுவனங்களை அமையுங்கள் . அகதிகளின் நிலைமை மாற வேண்டும் . அவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் . இழந்த சொத்துகளை தேடி கொள்ள வேண்டும் . அவர்கள் இழந்தவற்றை பெற வேண்டும் . அவர்களுக்கு சிறிய வேலைவாய்ப்புகளை பெற்று கொடுக்க வேண்டும் . இது எல்லோரினதும் கடமை என்று நினைக்க வேண்டும் .

2 comments:

Anonymous said...

good article


sutha

Pavi said...

நன்றி சுதா