Sunday, June 20, 2010

பூக்களின் ராணி மல்லிகை

 http://livemadurai.yavum.com/pictures/topnews_1265800759_jasmine.jpg
எல்லோருக்கும் பூக்களை பிடிக்கும் . அதுபோல மல்லிகை பூவை பிடிக்காதோர் எவரும் இல்லை . வெண்மை என்றால் சுத்தம் . அந்தளவு சுத்தமானது மல்லிகை பூ . வெள்ளை நிறமாக இருக்கும் மல்லிகை பூ அதனில் இருந்து வரும் வாசனை இயற்கையின் கொடை. ஆஹா........ ஆஹா ......
http://pics.davesgarden.com/pics/2007/05/05/blackthumbX2/8efac5.jpg
பெண்கள் அதிகம் தமது தலையில் சூடி கொள்வார்கள் . கோவில்களுக்கு செல்லும் போதும் , நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும் தமது தலையில் பூக்கள் சூடி கொள்வது வழமை . கூடுதலான பெண்கள் மல்லிகை பூவை தலையில் சூடி கொள்வதை விரும்புகிறார்கள் . அதன் அழகாலும் , அதன் வாசனையாலும் எல்லோருக்கும் பிடிக்கிறது .
http://www.tamilsigaram.com/Linkpages/women/Women/images/jan08/jasmin.jpg
எல்லா இடங்களிலும் செழித்து படர்ந்து வளரக்கூடியது . வீடுகளில் சிலர் பந்தல் போல போட்டு இருப்பார்கள் . பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும் . பெண்களுக்கு பிடித்த மலர்களில் மல்லிகைக்குத்தான் முதலிடம். இந்தியாவின் மலர் ஏற்றுமதியில் மல்லிகை பூ இரண்டாம் இடத்தில் உள்ளது.
http://3.bp.blogspot.com/_YIOSPSH_Xaw/SjG_C130jNI/AAAAAAAAABg/x4Uh4uGVjwM/s320/DSC00020.JPG
வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்கும் தலையில் சூடுவதற்கும் மட்டுமின்றி மாபெரும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மல்லிகைப் பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல மருத்துவப் பயன்களையும் கொடுக்கிறது.
http://www.tamilsigaram.com/Linkpages/districts/District/Images/Madurai/malligai1.jpg
மல்லியில் பலவகையுண்டு. சாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி. இவற்றின் தோற்றம் மாறுபட்டாலும் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. சாதாரணமாக மல்லிகையை மல்லி, புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என்று பல பெயர்களில் அழைக்கின்றர்.
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/health/jasmine.jpg
திரைப்படங்களில் கூட மல்லிகை பூவை பற்றி பல பாடல்கள் உண்டு ." மல்லிகையே மல்லிகையே மாலை இடும் மன்னவன் யார் சொல்லு ", மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா ", மல்லிகை என் மன்னன் மயங்கும் ", சாதி மல்லி பூச்சரமே " என்று மல்லிகையை பற்றி தமது கவி வரிகளை எழுதி உள்ளனர் .
http://2.bp.blogspot.com/_IX2ZBwgHC-Y/SunVZgZYOhI/AAAAAAAAAC0/9ltb-oJm5Ek/s320/jasminum-sambac.jpg
மல்லிகையின்  இலை, பூ, மொட்டு, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.  குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். சத்தான உணவின்மை, நேரங்கடந்த உணவு, நீண்ட பட்டினி, அதிக வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியுற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்து கின்றது. இவர்கள் மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். 
 http://www.theni.in/naturemedicine/images/malligai.jpghttp://www.essentialoil.in/images/jasmine.jpg
கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_62899416686.jpg
மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம். மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும். மல்லிகைப் பூவை நன்றாக கசச்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலைவலி உடனே குணமாகும்.
http://media.mit.net.my/photo/2/vizhuthugal/Jasmine-%20Upload_222200945708.jpghttp://imshopping.rediff.com/shopping/pixs/3809/j/Jasmine.jpg
மல்லிகைப் பூவிலிருந்து நல்ல மணமுள்ள வாசனை திரவியம் தயாரிக்கின்றனர். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும். நாள் முழுக்க மனம் வீசுகிறது . வியர்வை நாற்றம் இருப்பவர்கள் மல்லிகை பூவில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியத்தை உபயோகிக்கலாம் . நாள் முழுக்க புத்துணர்வோடு இருப்பீர்கள் .
http://oohgabooga.com/static/images/productimage-picture-malie-perfume-jasmine-32.jpg

5 comments:

S Maharajan said...

உபயோகமான தகவல்கள்
நன்றி பவி

Anonymous said...

super article pavi

Anonymous said...

photos ellaam nalla irukkuthu.......
mallikai vaasam veesukirathu......


kala

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி கலா