Thursday, June 24, 2010

ஒரு மாலை இளவெயில் நேரம்

http://site.cardone-luyben.com/images/love__beach__sunset__by_danicafaye-721652.jpg
ஒரு மாலை இளவெயில்
நேரத்தில் அவனை நான்
கண்டேன் - அவனோ
என்னை பார்க்கவில்லை
அவன் வேறெங்கோ
பார்த்த  வண்ணமாக
வீதியின் ஓரமாக
சென்று கொண்டிருந்தான்

நானோ இக்கரை
அவனோ அக்கரை
கண் சிமிட்டாது
அவனை நான் உற்று
பார்த்த வண்ணமே
நின்று கொண்டிருந்தேன்
http://www.videointroductions.com/images/TallHandsomeMan2.jpg
அவனோ பார்ப்பதற்க்கு
கம்பீரமாகவும் அழகானவனாகவும்
இருந்தான் - எங்கே
உற்று பார்த்த வண்ணமே
இருக்கிறான் என்று

நான் சிறிது நேரம்
யோசித்துவிட்டு நிமிர்ந்து
பார்த்தேன் அவனை
காணவில்லை - எங்கே
என்று நாலுவளமும்
திரும்பி பார்த்தேன்

 அவன் ஒரு பொலிஸ் ஜீப்பில்
போய் கொண்டு இருந்தான்
என்னவென்று விசாரித்தேன்
அவன் ஒரு கொள்ளைகார
கும்பலின் தலைவனாம்
என்று அங்கு கூடி
இருந்த மக்கள் பேசி
கொண்டு இருந்தார்கள் .

ம்ம்ம்ம்ம்ம் இதென்னடா
இப்படி உடம்பை கட்டுகோப்பாக
வைத்து கொண்டு இப்படி
கொள்ளை அடிப்பது தானா
இவனின் தொழில் என
http://www.sugarshow.org/wp-content/uploads/2009/04/376.jpg
நல்ல காலமடா சாமி
கொஞ்சம் அசந்திருந்தால்
நம்மட பணம் , நகைகள்
போய் இருக்குமே
தப்பினோம் , பிழைத்தோம்
என்ற வண்ணமாக
நான் எனது நடை
பயணத்தை தொடங்கினேன் ........
http://syaziewazie.files.wordpress.com/2009/12/2091159828love.jpg
எப்பிடி இருக்கு இந்த கவிதை . எனது நண்பிக்கு நடந்த சம்பவத்தை எனக்கு கூறினார் . அதை நான் கவிதை வடிவமாக இங்கே தந்துள்ளேன் . ஒருவரை நாம் நல்லவரா , கெட்டவரா என ஒரு நொடிப்பொளிதில் அறிவது கஷ்டம் .  தீர விசாரித்து தான் எந்த விடயம்களிலும் இறங்க வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன் . என் நண்பிக்கு அறிவுரையும் வழங்கினேன் .

4 comments:

tamilchannel said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

Swengnr said...

கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

Pavi said...

நன்றி வலையகம்
உங்கள் வரவேற்புக்கு

Pavi said...

நன்றி சொப்ட்