ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 81 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி கொண்டது . முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 44.4 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆசிய கிண்ணத்தை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. தினேஷ் கார்த்திக் அசத்தல் அரைசதம் மற்றும் நெஹ்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
ஆசிஷ் நெஹ்ரா 40 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கிய விக்கட்டுகளை பதம்பார்த்து இருந்தார் . இந்திய அணியில் டிண்டா, ஓஜா நீக்கப்பட்டு, நெஹ்ரா, ஹர்பஜன் இடம் பெற்றனர். இலங்கை தரப்பில் முரளிதரன், மலிங்கா, குலசேகரா மீண்டும் அணிக்கு திரும்பினர்.
போட்டியின் 14வது ஓவரில் ஜெயவர்தனா(11), மாத்யூசை(0) வெளியேற்றி, இரட்டை "அடி' கொடுத்தார் நெஹ்ரா . தனது அடுத்த ஓவரில் சங்ககராவை(17) அவுட்டாக்கிய இவர், இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். அப்போது 15.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. பின் கண்டம்பி, கபுகேதரா இணைந்து போராடினர். கண்டம்பி(31) ரன் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது . அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த கபுகேதரா(55) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய நெஹ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது .
இந்திய அணி ஆசிய கிண்ணத்தை வென்று அசத்தியது . இலங்கை அணி இறுதி போட்டியில் பரிதாபமாக தோல்வியை தழுவி ஆசிய கிண்ணத்தை கோட்டை விட்டது .
2 comments:
நம்ம அணிக்கும்.... நெஹ்ராவுக்கும் வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி,
நன்றி கருணாகரசு
Post a Comment