Friday, June 11, 2010

உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கால்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்

http://bluecadvertising.files.wordpress.com/2009/08/2010-logo.jpg
19வது உலகக் கிண்ண  கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் பெரும் விருந்தாக அமைய இருக்கிறது . பரபரப்பு , விறுவிறுப்பு , ஆக்ரோசம் என்று போட்டிகளுக்கு போட்டிகள் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைய இருக்கிறது .
http://samedy.files.wordpress.com/2009/06/2010collage.jpg
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண  கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கிண்ண  போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. பல்லாயிரம் ரசிகர்கள் பார்த்து மகிழும் வண்ணம் மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளன . உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தொலைக்காட்சிகளிலும் போட்டிகளை நேரடி ஒளிபரப்பாக காண காத்து இருக்கிறார்கள் .
http://sgfsoccer.com/wp-content/uploads/2009/12/FIFA_World_Cup_trophy.png
ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.
ஜூலை 11ம் திகதி  வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
http://despardes.com/wp-content/uploads/2010/06/World-Cup-2010-South-Africa-v-Guatemala.jpg
பிரேசில் , தென்கொரியா , இங்கிலாந்து , ஆர்ஜன்டீனா அணிகளில் ஒன்று இம்முறை கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் எதுவும் உடனுக்குடன் கூறமுடியாது . எந்த அணி வெல்லும் என தீர்க்கமாக சொல்ல முடியாது . அன்றைய போட்டிகளும், வீரர்களின் செயட்பாடுகளிலுமே வெற்றி , தோல்வி தங்கி உள்ளது .
ஏனெனில் எல்லா அணிகளுமே சிறப்பான அணிகள் , பலம் பொருந்திய அணிகள் தான் . எது எப்பிடி இருப்பினும் ரசிகர்களுக்கு பெரும் கால்பந்தாட்ட திருவிழா காத்து இருக்கிறது . எல்லோரும் பார்த்து ரசியுங்கள் .
http://www.apurogol.com/wp-content/uploads/2009/01/mario-bolatti-independiente-porto.jpg









5 comments:

Anonymous said...

mmmmmmm naam thayaar .........


mano

Anonymous said...

kaalpanthu thiruvilaa start..........


vimal

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி விமல்

Anonymous said...

உலகக் கிண்ண கால்பந்து போட்டி பற்றிய உங்கள் பல தகவல்களுடன் சிறப்பாக இருந்தது.நன்றி.இங்கிலாந்து, தென்கொரியா வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிற அணிகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏற்கனவே உலகக் கால்பந்து கிண்ணத்தை பல தடவை கைப்பற்றிய யேர்மனி, இத்தாலியை மறந்தது ஏனோ?