எல்லோரும் சாப்பிடக்கூடியதும் , எல்லோருக்கும் ஏற்றதும் தான் இந்த கீரை வகைகளில் ஒன்றான பொன்னாங்காணி. சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. எங்கும் வளரும் . வீட்டிலும் வளர்க்கலாம் . தேவையான நேரம் பறித்து உணவுக்கு பயன்படுத்தலாம் .
இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கல்சியம் , பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. எல்லா சத்துக்களும் அடங்கியது . தினம் ஒவ்வொரு கீரைவகைகள் நாம் சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு மிகவும் நல்லது . கல்சியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.
இதில் விட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும் . பார்வை கோளாறு வராது. கண்பார்வை தெளிவாக இருக்கும் .
இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.
. இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.
இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும். உடல் உஷ்ணம் குறையும். இரத்தம் விருத்தியாகும். சுத்தமாகும் . இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.
'கீரைகளின் ராஜா' என்றால் அது பொன்னாங்காணி மாத்திரம் தான் . எல்லோரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள் .

5 comments:
என்ன பவி இப்போ சமையல் குறிப்பு
எல்லாம் சொல்ல ஆரமிசுடீங்கள
கலக்குங்க
varavetkappadukinrana ippadiyaana pathivukalum pavi
anpu
எல்லாவகையான பதிவுகளும் எனது தளத்தில் இடம்பெற வேண்டும் .
நல்ல விடயங்களை எனது தளத்தில் எழுத வேண்டும், சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் .
நன்றி மகாராஜன் .
நன்றி அன்பு
பதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Post a Comment