Thursday, June 10, 2010

சத்துள்ள கீரை பொன்னாங்காணியின் சிறப்பு

 http://2.bp.blogspot.com/_uaVw0D687Ww/SS0QWB7WmBI/AAAAAAAAADo/5kePc7iK9MM/s320/ponnangkanni.jpg
எல்லோரும் சாப்பிடக்கூடியதும் , எல்லோருக்கும் ஏற்றதும் தான் இந்த கீரை வகைகளில் ஒன்றான பொன்னாங்காணி. சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.  எங்கும் வளரும் . வீட்டிலும் வளர்க்கலாம் . தேவையான நேரம் பறித்து உணவுக்கு பயன்படுத்தலாம் .

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கல்சியம் , பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.  எல்லா சத்துக்களும் அடங்கியது . தினம் ஒவ்வொரு கீரைவகைகள் நாம் சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு மிகவும் நல்லது . கல்சியம்  அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.
http://www.tamilheritage.org/kidangku/siddha/mulikai/images/Ponnangkani-koduppai.jpg
இதில் விட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும் . பார்வை கோளாறு வராது. கண்பார்வை தெளிவாக இருக்கும் .
இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.
. இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.
http://www.dinakaran.com/Healthnew/H_image/ht261.jpg
இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.  உடல் உஷ்ணம் குறையும். இரத்தம்  விருத்தியாகும். சுத்தமாகும்  . இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.


'கீரைகளின் ராஜா' என்றால் அது 
பொன்னாங்காணி மாத்திரம் தான் . எல்லோரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள் . 













5 comments:

S Maharajan said...

என்ன பவி இப்போ சமையல் குறிப்பு
எல்லாம் சொல்ல ஆரமிசுடீங்கள
கலக்குங்க

Anonymous said...

varavetkappadukinrana ippadiyaana pathivukalum pavi


anpu

Pavi said...

எல்லாவகையான பதிவுகளும் எனது தளத்தில் இடம்பெற வேண்டும் .
நல்ல விடயங்களை எனது தளத்தில் எழுத வேண்டும், சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் .
நன்றி மகாராஜன் .

Pavi said...

நன்றி அன்பு

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்