Monday, June 28, 2010
செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்
நாம் தமிழர் . நமக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டும் . நம் மொழி தமிழ் , தமிழர்கள் எல்லோரும் பெரனந்தப்பட வேண்டியது நமது மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தமைக்கு . கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்து தமிழர்கள் எல்லோரினதும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டது . எல்லா நாடுகளிலும் நம் தமிழர் வசிக்கிறார்கள் . அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் தமிழையும் ஒரு பாடமாக கற்று தமிழ் பேசும் சமூகத்தை உருவாக்க வேண்டும் .
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தமைக்கு ஏற்ப சிறந்த பாடலும் உருவாக்கி உள்ளது . அதனையும் , அதன் அர்த்தங்களையும் , கருத்துக்களையும் , தமிழின் சுவையையும் எல்லோரும் அறிந்து கொள்வோம் . பல பாடகர்கள் சேர்ந்து இந்த பாடலை பாடி இருக்கிறார்கள் .
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்....
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
நம்மொழி நம் மொழி... அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
super song
mano
nalla varikal . arththamulla varikal .
suba
நன்றி மனோ
நன்றி சுபா
Post a Comment