Tuesday, June 15, 2010

விடியலை நோக்கி

http://www.longton-elim.org.uk/images/new%20life.jpg
ஆண்டாண்டு காலம்
நாம் பட்ட கஷ்டம்
போதும் , அனுபவித்த
துன்பங்கள் போதும்
என இருந்தோம்
வீடை இழந்தோம்
சொத்தை இழந்தோம்
நிலத்தை இழந்தோம்
பெற்றோரை இழந்தோம்
பிள்ளைகளை இழந்தோம்
இனி இழப்பதற்க்கு
ஒன்றும் இல்லை
மனதில் தென்பும்
இல்லை - வைராக்கியமும்
இல்லை - தன்னம்பிக்கை
மட்டும் உள்ளது
நாம் வேண்டுவது
http://www.australiaforum.com/wp/wp-content/files/2009/10/family-overseas.jpg
எமது மண்ணில்
வாழ்ந்து மடிவது மட்டுமே
நம் விடியலுக்காக
காத்து இருக்கிறோம்........

1 comment:

Anonymous said...

mmm super.....


vino