இந்திய, இலங்கை , ஜிம்பாவே அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு தொடர் ஜிம்பாவேயில் நடந்தது . இந்திய அணி முதலில் வெளியேறி சென்றது . பலமான இந்திய அணியை வெற்றி கொண்டு அசத்தியது ஜிம்பாவே அணி . நேற்று நடந்த இறுதி போட்டியில் ஜிம்பாவே அணியும் இலங்கை அணியும் மோதின .
நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது . ஜிம்பாவே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் டெய்லர் (19) இந்த முறை கைகொடுக்க தவறினார். பின்னர் களமிறங்கிய தைபு பொறுப்புடன் ஆடினார். இவருக்கு லேம்ப் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, ஜிம்பாவே 100 ஓட்டங்களை கடந்தது. ஒரு நாள் அரங்கில் 13 வது அரை சதம் கடந்த தைபு, 71 ஓட்டங்களுக்கு அவுட்டானார். லேம்ப் (37) ஆறுதல் அளித்தார்.
இறுதியில் ஜிம்பாவே அணி 199 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய இலங்கை அணிக்கு தில்ஷானும் , தரங்கவும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர் . ஜிம்பாவே பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை அடித்து விளாசி அசத்தினார்கள் .
தரங்கவும் , தில்ஷானும் முதல் விக்கட்டுக்காக 160 ஓட்டங்கள் சேர்த்தனர் . ஒரு நாள் அரங்கில் 15 வது அரை சதம் கடந்தார் தரங்க . டில்ஷான் அடித்த பந்து சிறு தூரத்துக்கு போய் இருந்தும் டில்ஷான் ஓட்டம் பெற முயற்சிக்க தரங்க ஓட்டம் பெறாமல் நின்றார் . டில்ஷான் செய்த தவறால் பரிதாபமாக ரன் அவுட் ஆனார் தரங்க . 8 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 72 ஓட்டங்கள் சேர்த்தார் தரங்க .நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது . ஜிம்பாவே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் டெய்லர் (19) இந்த முறை கைகொடுக்க தவறினார். பின்னர் களமிறங்கிய தைபு பொறுப்புடன் ஆடினார். இவருக்கு லேம்ப் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, ஜிம்பாவே 100 ஓட்டங்களை கடந்தது. ஒரு நாள் அரங்கில் 13 வது அரை சதம் கடந்த தைபு, 71 ஓட்டங்களுக்கு அவுட்டானார். லேம்ப் (37) ஆறுதல் அளித்தார்.
இறுதியில் ஜிம்பாவே அணி 199 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய இலங்கை அணிக்கு தில்ஷானும் , தரங்கவும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர் . ஜிம்பாவே பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை அடித்து விளாசி அசத்தினார்கள் .
அடுத்த வந்த சண்டிமால், நிதானமாக ஆடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷான் , ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 7 வது சதம் கடந்தார். கிரீமர் பந்து வீச்சில் டில்ஷான் , ஒரு பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 34.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 203 ஓட்டங்கள் சேர்த்து இலகுவாக வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை தில்ஷானும் , தொடர் நாயகன் விருதை ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லரும் பெற்றனர் . கிண்ணத்தை வென்று அசத்தியது இலங்கை அணி . இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்களும் .
4 comments:
super pathivu nalla irukku.
vino
mmmmmm super
suba
நன்றி வினோ
நன்றி சுபா
Post a Comment